காவிரி.. பிரதமர், அமைச்சர்கள் பிரசாரத்தில் பிசி.. மட்டமான காரணம் கூறி வாய்தா கேட்ட மத்திய அரசு
காவிரி வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. மத்திய அரசு வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க இன்னும் இரண்டு வாரம் கால அவகாசம் கேட்கலாம் என்று கூறப்படுகிறது.
Recommended Video

டெல்லி: காவிரி வரைவு திட்டத்தை மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. காவிரி வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க இன்னும் இரண்டு வாரம் கால அவகாசம் கேட்டுள்ளது. இதற்கு கர்நாடக தேர்தலை காரணம் காட்டியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம், ஆனால் காவிரிக்கு திட்டம் ஒன்றை உருவாக்குவோம் என்றும் கூறியது. இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இரண்டு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு இருக்கிறது.

இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது..
காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் முடியும் நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. தற்போது மத்திய அரசு கூடுதலாக இன்னும் 2 வாரம் கால அவகாசம் கேட்டுள்ளது. நேரடியாக எழுத்துபூர்வமாக அவகாசம் கேட்காமல், வாய்மொழி அவகாசம் கேட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகிவிட்டது என்று மத்திய அரசு வாதாடியுள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு இன்னும் அவகாசம் வேண்டும் என்றுள்ளது. அமைச்சர்கள் கர்நாடகாவில் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக்கு வரைவு திட்டத்தை அனுப்ப முடியவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications