காவிரி வழக்கில் எழுத்துப்பூர்வ பதில் தர மத்திய அரசுக்கு புதன் வரை சுப்ரீம் கோர்ட் அவகாசம்
டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ பதிலை மத்திய அரசு தாக்கல் செய்ய வரும் புதன்கிழமை வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா? என்பது குறித்த தீர்ப்ப தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் ஒத்தி வைத்தது. அப்போது அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தங்களது தரப்பு வாதங்களை இன்றைக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

மேலும் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து மறு உத்தரவு வரும் வரை 2,000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே மத்திய அரசு தம்முடைய எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய புதன்கிழமை வரை இன்று கால அவகாசம் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதன்படி தமிழகத்துக்கு 419 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications