காவிரி பிரச்சினை... கர்நாடக கலவரத்தின் போது ‘செல்பி’ எடுத்து போலீசில் சிக்கிய 1,339 கலகக்காரர்கள்!
பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வன்முறையில் ஈடுபட்டதாக 1,339 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வன்முறையின் போது செல்பி எடுத்துக் கொண்டதன் மூலமாகவே போலீசாரிடம் சிக்கியது தற்போது தெரிய வந்துள்ளது.
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் கடந்த மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது. கன்னட அமைப்புகள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களின் வாகனங்கள், கடைகள் போன்றவை கொளுத்தப்பட்டன. இருமாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த வன்முறை தொடர்பாக 1,339 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், இவர்கள் கைது செய்யப்படக் காரணமான சாட்சி தான் வித்தியாசமானது.

செல்பி புள்ள...
அதாவது வன்முறையின் போது கடைகளை அடித்து நொறுக்கி, வாகனங்களை தீயிட்டு கொளுத்திய வன்முறைக்காரர்கள் பலர் செல்பி மோகத்தால், கையில் ஆயுதங்களுடன் சம்பவ இடத்திலேயே செல்பி எடுத்துக் கொண்டனர்.

வைரல் ஆனது...
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகப் பரவியது. தற்போது அந்த செல்பி போட்டோக்கள், வீடியோக்களை வைத்து தான் போலீசார் தங்களது கடமையை செவ்வணே செய்துள்ளனர்.

போலீசார் அதிரடி...
கர்நாடக வன்முறையின் போது இது போல் 120 போட்டோக்கள், 28 வீடியோக்கள் போலீசாரிடம் சிக்கியதாம். அதன் அடிப்படையில் தான் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

159 வாகனங்கள் சேதம்...
இந்த வன்முறையின் போது 159 வாகனங்கள், 37 கடைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும்,49 காவல்துறையினர்கள், 17 பாதுகாப்பு படையினர்களும் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications