காவிரி ஆணையம் - அரசிதழின் நகல் இணையத்தில் வெளியானது
காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அதன் நகல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அதன் நகல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு இதை தாக்கல் செய்யாமல் இழுத்துக் கொண்டே வந்தது.

அதன் பின் பல முறை இழுத்தடித்து கடைசியாக திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை ஒத்திவைத்தது. மேலும் வரைவு திட்டத்தை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆணைய அரசிதழின் நகல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அரசிதழில் வெளியான அறிவிப்பு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டது. மேலும் அரசிதழ் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள் அரசிதழில் உள்ளது. காவிரி வாரியத்தின் செயல்பாடு உள்ளிட்ட விவரம் அரசிதழில் உள்ளது. ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் செயல்படுவார். உறுப்பினர்கள் குறித்த விவரமும் நகரில் இடம்பெற்றுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications