சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தண்ணீர் திறக்க.. காவிரி மேற்பார்வைக்கு ழுவிடம் தமிழகம் வலியுறுத்தல்
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள தண்ணீர் திறந்து விடுமாறு டெல்லியில் நடந்த காவிரிமேற்பார்வைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணிய
டெல்லி: தமிழகம் மற்றும் கர்நாடகா பங்கேற்றுள்ள காவிரி மேற்பார்வைக்குழுவின் மாதாந்திர கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. தமிழகம் சார்பாக காவிரித்தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நீர்பாசனத்துறை செயலாளர் பங்கேற்றனர். கூட்டத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டப்படி நிலுவையில் உள்ள காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்
கர்நாடக அரசு காவிரியில் உடனடியாக 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, தமிழக அரசு காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி, ஒழுங்காற்று வாரியம் அமைக்கும் முன்னதாக, இடைக்கால ஏற்பாடாக மேற்பார்வைக்குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. மத்திய நீர்வளத்துறைச் செயலர் தலைமையிலான இந்தக் குழுவில், தமிழகம், கர்நாடகம், கேரள மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர்.
காவிரி மேற்பார்வைக்குழு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடி விவாதித்தது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் குடி தண்ணீர் தட்டுப்பாட்டை காரணம் கூறி இதுவரை தேவையான அளவு தண்ணீர் திறந்து விட வில்லை. தமிழகத்தில் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு பயிர்கள் காய்ந்து கருகின. பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். எனினும் காவிரியில் கர்நாடாக தண்ணீர் திறந்து விடவில்லை.
இந்த நிலையில் மாதாந்திர கூட்டம் இன்று டெல்லியில் கூடியுள்ளது. இந்தக்கூட்டத்தில் தமிழகம் சார்பாக காவிரித்தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நீர்பாசனத்துறை செயலாளர் பங்கேற்றனர்.
ஆலோசனைக்கூட்டம் கூட்டம் நிறைவடைந்த உடன் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், காவிரி பிரச்சனையில் இரு மாநிலங்களும் தகவல்களை பரிமாறிக்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். வெளிப்படை தன்மைக்கு தகவல்களை பரிமாற வேண்டியது அவசியமாகும் என காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது போல நிலுவையில் உள்ள தண்ணீரை வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகவும் சுப்ரமணியன் கூறியுள்ளார். அடுத்த கட்ட ஆலோசனைக்கூட்டம் மார்ச் 30ஆம் தேதி நடைபெறும் என்றும் சுப்ரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு விநாடிக்கு 2000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உத்தரவிட்டும் அதை கர்நாடகா நிறைவேற்ற வில்லை. காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் தமிழகத்தில் வறட்சியினால் பயிர்கள் கருகி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications