சர்க்கரை ஆலை முறைகேடு வழக்கு.. சிபிஐ விசாரணை வளையத்தில் பஞ்சாப் முதல்வரின் மருமகன்
சண்டிகர்: சர்க்கரை ஆலை முறைகேடு தொடர்பாக, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், மருமகன் குர்பால் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருவது சிம்போலி சர்க்கரை ஆலை. நாட்டின் மிகப்பெரிய சர்க்கரை ஆலை இதுவாகும்.

இந்த ஆலை, சண்டிகரில் உள்ள ஓரியண்டல் வங்கி கிளையில் தொழில் வளர்ச்சிக்காக என்று கூறி, ரூ.109 கோடி அளவில் கடன் பெற்று அதனைத் திரும்பச் செலுத்தவில்லை என்று சிபிஐயிடம் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சிம்போலி சர்க்கரை ஆலை குழுமத் தலைவர் குர்மித் சிங் மான், தலைமைச் செயல் அதிகாரி ராவ், தலைமை நிதி அலுவலர் சஞ்சய் தப்ரியா, செயல் இயக்குநர் குர்சிம் கவுர் மான் மற்றும் அந்நிறுவனத்தின் சில அதிகாரிகள், வங்கி அலுவலர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த பண மோசடியில் தொடர்பு இருப்பதாக பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கின் மருமகன் குர்பால் சிங் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
வங்கி மோசடி வழக்குகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் முதல்வரின் மருமகன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications