நிலக்கரி சுரங்க முறைகேடு.. சி.பி.ஐ. மாஜி இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது வழக்கு
நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
டெல்லி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா தனது வீட்டில் ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் குற்றம் சாட்டப்பட்டவர்களை சந்தித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை பலமுறை அவரது வீட்டில் சந்தித்ததாக புகார் எழுந்தது. அவரது வீட்டு வருகைப் பதிவேட்டில் இதற்கான ஆதாரம் இருப்பதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீதான புகார் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நிலக்கரி சுரங்க ஊழல் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்திருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications