For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது சிபிஐ அவதூறு வழக்கு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக தவறான தகவலை வெளியிட்டதற்காக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் காமினி ஜெய்ஸ்வால் மீது சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ இயக்குநர், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிக்கு ஆதரவாக செயல்படுவதாக பிரசாந்த் பூஷன் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தம்மைப் பற்றி பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக, சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

CBI files perjury case against Prashant Bhushan, Kamini Jaiswal

இதுதொடர்பாக, தமக்கு எதிரான மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர்கள் காமினி ஜெய்ஸ்வால் மற்றும் பிரசாந்த் பிரசாந்த் பூஷன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என, தமது மனுவில் ரஞ்சித் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.

ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை அதிகாரியை இடமாற்றம் செய்ய தாம் உத்தரவிடவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெறுகிறது.

முன்னதாக, ஸ்பெட்க்ரம் மற்றும் ஏர்செல் - மேக்ஸிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களை, ரஞ்சித் சின்ஹா சந்தித்துப் பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ரஞ்சித் சின்ஹாவுக்கு எதிராக பிரசாந்த் பிரசாந்த் பூஷன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

English summary
Central Bureau of Investigation (CBI) on Friday moved the Supreme Court for lodging a case of perjury against activist-advocate Prashant Bhushan and Kamini Jaiswal of Centre for Public Interest Litigation (CPIL), for allegedly making "deliberate and intentional false statements on oath" in a petition seeking that the agency's chief disengage himself from the probe into the 2G scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X