For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசுக்கு ரூ.709 கோடி இழப்பு! முன்னாள் மத்திய அமைச்சர் சங்கர் சிங் வகேலா உள்பட 6 பேர் மீது வழக்கு!

Google Oneindia Tamil News

டெல்லி : தேசிய ஜவுளி கழகத்துக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்று அரசுக்கு ரூ.709 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக ஜவுளித்துறையின் முன்னாள் அமைச்சர் சங்கர் சிங் வகேலா மற்றும் தேசிய ஜவுளி கழகத்தின் தலைவரும், நிறுவனருமான ராமச்சந்திரன் பிள்ளை உள்பட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து ஒரு ஆண்டு காலம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையை தொடர்ந்து சங்கர் சிங் வகேலா மற்றும் ராமச்சந்திரன் பிள்ளை உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ நில மோசடி வழக்கு பதிவு செய்தது.

shankar singh vagela

இதைதொடர்ந்து சி.பி.ஐ போலீசார், சங்கர் சிங் வகேலா உள்ளிட்ட 6 பேரின் வீடுகள் உள்பட டெல்லி, காந்தி நகர், மும்பை, கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் 9 இடங்களில் சோதனை நடத்தினர்..

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சங்கர் சிங் வகேலா குஜராத் சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவராகவும் உள்ளார். இவர் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் என்பது கூடுதல் தகவல்.

English summary
CBI has registered FIR against former Union Textile Minister Shankarsinh Vaghela and six others including the then Chairman-cum-Managing Director of National Textile Corporation for sale of prime property in Mumbai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X