ஹெலிகாப்டர் ஊழல்.. ஆந்திர ஆளுநர் நரசிம்மனும் சிக்கினார்! சிபிஐ விசாரணை நடத்த முடிவு!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கிய ஊழல் விவகாரத்தில் ஆந்திர ஆளுநர் நரசிம்மனிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

வி.வி.ஐ.பிக்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியபோது ஊழல் நடந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த எம்.கே. நாராயணன் சாட்சியமாக சேர்க்கப்பட்டு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

CBI to question Andhra governor Narasimhan in chopper scam

இதையடுத்து நாராயணன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானபோது நாராயணன் தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார்.

இதன் பின்னர் கோவா ஆளுநராக இருந்த பி.வி. வான்சூவின் பெயரும் சாட்சியமாக சேர்க்கப்பட்டது. அவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வான்சூவும் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மனிடமும் விசாரணை நடத்த சிபிஐ விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அப்படி சிபிஐ விசாரணை நடத்தினால் நரசிம்மனும் தமது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+