உர ஊழல் வழக்கு: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
ஜெய்ப்பூர்: உர ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ரசென் கெலாட்டுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
2007-ம் ஆண்டு முதல் 2009-ல் ஆண்டு வரை மானிய விலையில் உரத்தை ஏற்றுமதி செய்து ஊழலில் ஈடுபட்டார் என அக்ரசென் கெலாட் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கதுறை ஏற்கனவே வழக்குப் பதிவு செய்தது. அத்துடன் அக்ரசென் கெலாட்டுக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று அக்ரசென் கெலாட்டுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அக்ரசென் கெலாட் மீதான உர ஊழல் முறைகேடு தொடர்பாக சிபிஐ புதிய வழக்கைப் பதிவு செய்திருக்கிறது. இதனடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க எதிர்ப்பு காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அசோக் கெலாட்டும் பங்கேற்றார்.
இந்த பின்னணியில் அசோக் கெலாட்டின் சகோதரர் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் சிக்கி இருக்கிறார். ஆகையால் இது அரசியல் பழிவாங்கல் என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications