கோபிநாத் முண்டே விபத்து தொடர்பான வழக்கு: சிபிஐ களம் இறங்கியது!
டெல்லி: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் விபத்து பற்றிய வழக்கை விசாரிக்க சிபிஐ களம் இறங்கியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பீட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கோபிநாத் முண்டே. இவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இந்நிலையில் மோடியின் தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை இவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 3ஆம் தேதி அன்று டெல்லியில் இருந்து மும்பை செல்வதற்காக இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு காரில் சென்றார். டெல்லியின் பிரித்விராஜ் ரோடு - துக்ளக் ரோடு ரவுண்டானா பகுதியௌ அவருடைய கார் கடந்தபோது எதிரே வந்த மற்றொரு கார் அவருடைய காரின் மேல் பலமாக மோதியது.

திடீரென்று ஏற்பட்ட இவ்விபத்தில் காயமடைந்த கோபிநாத் முண்டே, அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.
கோபிநாத் முண்டேயின் இந்த திடீர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது பற்றி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி, மராட்டிய பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர்.
இதனால் கோபிநாத் முண்டேயின் மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் அந்த வழக்கை சி.பி.ஐ நேற்று விசாரணைக்கு ஏற்றது.
இது தொடர்பாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோபிநாத் முண்டேயின் வழக்கில் சிபிஐ களம் இறங்கி இருப்பதால் பல திடீர் திருப்பங்கள் நிகழலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications