மணிப்பூர்: வன்முறைகள் திட்டமிட்ட சதியா? என விசாரிக்கும் சிபிஐ! பாஜக எம்எல்ஏ வீட்டில் குண்டு வீச்சு!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகள் திட்டமிட்ட சதியா என்பது தொடர்பாக சிபிஐ விசாரிக்க அம்மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. இதனிடையே மணிப்பூரில் பாஜக எம்.எல்.ஏ. வீட்டில் கையெறி குண்டு வீசப்பட்டுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் குக்கி இன மக்கள். இதனால் இரு இனங்களுக்கு இடையேயான மோதல் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. கடந்த ஒரு மாத காலமாக 100க்கும் மேற்பட்டோர் வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். 30,000க்கும் அதிகமானவர்கள் சொந்த இடங்களைவிட்டு அதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் மணிப்பூர் மாநிலத்தில் 10,000க்கும் அதிகமான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 500க்கும் அதிகமான பிஎஸ்எப் படை வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதற்கு குக்கி இனக்குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குக்கி இனக்குழுவில் ஆயுதம் ஏந்தியவர்கள் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முகாமிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் வன்முறைகள் ஓயவில்லை. இந்த நிலையில் மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் திட்டமிட்ட சதியா? என்பது குறித்து சிபிஐ விசாரிக்க அம்மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவரது வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications