கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு! மருத்துவமனை சிசிடிவியில் சஞ்சய் ராய்! கையில் என்ன? அதிர்ந்த போலீஸ்!
கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில், குற்றவாளியாகக் கருதப்படும், சஞ்சய் ராய் மருத்துவமனைக்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து, கையில் ஹெல்மெட்டுடன் இருக்கிறார். இந்த ஹெல்மெட் கொல்கத்தா காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் கடந்த சில நாட்களாக சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும், தீவிரம் சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் மரணத்திற்கான சாத்தியக் கூறுகள், ஆதாரங்கள் உள்ளிட்டவை கிடைக்கிறதா எனவும், ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொலையான மாணவி மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 6.10 முதல் 7.10 மணி வரை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கைகளைக் கொண்டு கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
மேலும், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அந்த மாணவியின் பிறப்புறுப்பில் 151 கிராம் ஆண் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடலில் சில இடங்களில் ரத்தம் உறைந்திருக்கிறது. மூக்கு, கழுத்து, கை, கண்ணம், உதடு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் 16 இடங்களிலும், கழுத்து, உள்தசை, உச்சந்தலை என உள்பகுதிகளில் ஒன்பது இடங்களில் மிக கொடூரமான காயங்கள் இருக்கிறது.
தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை எதிர்த்து அவர் போராடி இருக்கிறார். மேலும் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் சஞ்சய் ராயின் ரத்த மாதிரியும் ஒன்றாக இருப்பதால் அவர் கொலையில் நேரடியாக ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் குற்றவாளியாகக் கருதப்படும், சஞ்சய் ராய் மருத்துவமனைக்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில், ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து, கையில் ஹெல்மெட்டுடன் இருக்கிறார். இந்த ஹெல்மெட் கொல்கத்தா காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த சிசிடிவி காட்சிகளில் சஞ்சய் ராயின் கழுத்தில் புளூடூத் ஹெட்செட் இருப்பதையும் காண முடிகிறது. இது பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடத்தில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்ட அதே ஹெட்செட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிசிடிவி காட்சிகள் தான் தற்போது நடந்து வரும் விசாரணையில் முக்கிய காட்சிப் பொருளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications