காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறி துப்பாக்கிச் சூடு... 2 ராணுவ வீரர்கள் பலி!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை மீறி நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு: ஜம்முகாஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இன்று காலையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் இருந்த 2 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பாணி பாகிஸ்தான் இந்திய எல்லையில் அமைந்துள்ளது. இங்கு தீவிரவாதிகள் எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக இருப்பதால் எப்போதும் ராணுவ வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இந்நிலையில் இன்று காலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது.

தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு இந்திய ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் இந்த துப்பாக்கிச் சண்டையில் துரதிஷ்டவசமாக இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications