Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை: கேரளா அரசு கிடுக்குபிடி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு அலுவலகங்களில் பணி நேரத்தின் போது ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

கேரளாவில் பெரும்பான்மையான அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிநேரத்தின் போது பல மணி நேரம் செல்போன்களை பயன்படுத்துவதால் பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. பல ஊழியர்கள் பணிநேரத்தில் தங்களது பணிகளை மறந்து செல்போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் உட்பட சமூக இணையதளங்களில் மூழ்கி விடுகின்றனர். இதனால் பல்வேறு முக்கிய தேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

cellphone banned government office's in kerala

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு அலுவலகங்களில் பணிநேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கேரள அரசு தடை விதித்தது. ஆனால் இந்த உத்தரவால் எந்த பலனும் ஏற்படவில்லை. பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் வழக்கம்போல செல்போன்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக தொழில் துறை விஜிலென்ஸ் அமைப்பிலிருந்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், ‘'அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அந்தந்த துறை தலைவர்கள் இதை கண்காணித்து தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களிலுள்ள கம்ப்யூட்டர்களிலும் ஊழியர்கள் சமூக இணையதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+