உச்ச நீதிமன்ற கேள்வி எதிரொலி.. காஷ்மீரில் 5 மாவட்டங்களில் மீண்டும் தொடங்கிய செல்போன் சேவை!
ஜம்மு காஷ்மீரில் ஐந்து மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஐந்து மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது. அங்கு விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரியாக மூன்று வாரம் முன் காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.
காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. காஷ்மீரில் என்ன தான் ராணுவம் குவிக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் அங்கு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
காஷ்மீரில் இன்னும் முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் எல்லோரும் வீட்டு காவலில்தான் இருக்கிறார்கள். மொத்தம் 174 அரசியல்வாதிகள், அதிகாரிகள் இன்னும் அங்கு வீட்டு காவலில் இருக்கிறார்கள்.

என்ன மனநிலை
அங்கு தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு வந்தாலும் மக்கள் இன்னும் ராணுவத்திற்கு எதிரான மனநிலையுடன்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் காஷ்மீரில் ஏன் தொலைத்தொடர்பு கட்டுப்பாடு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் இருக்கிறது என்று அரசு விளக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது.

உச்ச நீதிமன்றம்
காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு 7 நாளில் பதில் அளிக்க வேண்டும், அங்கு ஏன் மக்களுக்கு மிக கடுமையான அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று விளக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்காக உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

சேவை
இதையடுத்துதான் தற்போது ஜம்மு காஷ்மீரில் ஐந்து மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது. ஜம்முவின் தோடா, கிஸ்துவார், ராம்பான், ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த செல்போன் சேவை மீண்டும் தொடங்கியது.

வாய்ப்பு
24 நாட்களாக முடக்கப்பட்டிருந்த செல்போன் சேவை மீண்டும் தொடங்கியது. இந்த பகுதிகள் ஜம்முவில் மிகவும் அமைதியான பகுதிகள் ஆகும். அங்கு விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications