Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லடாக்கில் வெடித்த வன்முறை போராட்டம்.. 24 மணி நேரத்திற்குள் மத்திய அரசு எடுத்த மிக முக்கிய நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து நடந்த போராட்டத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதனால் அங்கு முழுக்க பரபரப்பான ஒரு சூழல் உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையிலான தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது அது இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே லடாலக்கிற்கு தனியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அங்குப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் நேற்று திடீரென வன்முறை வெடித்தது.

Central Government Cancels Foreign Funding Licence of Sonam Wangchuk s Institute Post-Leh Violence

லடாக் வன்முறை

இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 80 பேர் காயமடைந்தனர். குறிப்பாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 40 பேர் இதில் காயமடைந்தனர். அங்கு பாஜக அலுவலகம் உட்படச் சில கட்டிடங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனால் அங்கு மிகவும் பதற்றமான ஒரு சூழல் உருவானது.

மத்திய அரசு நடவடிக்கை

இதற்கிடையே லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையிலான "ஸ்டூடென்ட்ஸ் எஜுகேஷனல் அண்ட் கல்ச்சுரல் மூவ்மென்ட் ஆஃப் லடாக்" (SECMOL) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. நமது நாட்டில் இருக்கும் தன்னார்வத் தொண்ட நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வாங்க இந்த FCRA உரிமம் கட்டாயமாகும்.

வெளிநாட்டு நிதி தொடர்பான சட்ட விதிகளை மீண்டும் மீண்டும் மீறியதாலேயே சோனம் வாங்சுக் தொண்டு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்த 24 மணி நேரத்தில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.. லடாக் மாநில அந்தஸ்து கோரி போராட்டம் இயக்கத்தின் முக்கிய முகமாக சோனம் வாங்சுக் உருவெடுத்துள்ள நிலையில், இப்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வட்டாரங்கள்

சோனம் வாங்சுக் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக முன்கூட்டியே தகவல் வெளியானது. அவரது பேச்சுகளைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களைத் தூண்டிவிட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் கருதின. உள்ளூர் பாஜக அலுவலகத்தையும் லடாக் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தையும் தாக்கப் போராட்டக்காரர்களை அவரே தூண்டிவிட்டதாகவும் இதன் காரணமாகவே நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் முன்னதாகவே கூறியிருந்தன.

காரணம் என்ன

குறிப்பாக சோனம் வாங்சுக் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளில் கடுமையான நிதி முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகள் பலமுறை மீறப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக உள்துறை வட்டாரங்கள் கூறினார். மேலும், இது தொடர்பாக 4 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சோனம் வாங்சுக் தரப்புக்குக் கடந்த செப்டம்பர் 10ம் தேதியே நோட்டீஸும் அனுப்பப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. FCRA உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இனிமேல் சோனம் வாங்சுக் தலைமையிலான ஸ்டூடென்ட்ஸ் எஜுகேஷனல் அண்ட் கல்ச்சுரல் மூவ்மென்ட் ஆஃப் லடாக் தொண்டு நிறுவனத்தால் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற முடியாது.

லடாக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இப்போது இரண்டாவது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு மெல்ல அமைதி திரும்பி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+