நோ பார்க்கிங் வாகனங்கள் புகைப்படங்கள் அனுப்பினால் 10% கமிஷன் சன்மானம்: நிதின் கட்காரி
நோ பார்க்கிங்கில் நிற்கும் வாகனங்கள் குறித்து தகவல் தந்தால் சன்மானம் வழங்கப்படும் என்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.
டெல்லி : நோ பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் குறித்த தகவல்கள் தந்தால் அபராதத் தொகையில் 10% சன்மானமாக அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். சாலைகளில் சாதாரணமாக நடக்கக் கூட முடியாத அளவில் போக்குவரத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதில் விதிமீறல்களும் அதிகரித்து உள்ளது. போலீஸார் அதனைக் கட்டுப்படுத்த பலவித முயற்சிகள் எடுத்துவருகிறார்கள். இருந்தும் இது போலீஸாருக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. இதனால் புதிய திட்டம் ஒன்றை அறிவித்து உள்ளார் மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்காரி.
நோ பார்க்கிங் பகுதிகளில் நிற்கும் வாகனங்களை புகைப்படம் எடுத்து தனக்கோ, தனது துறை சார்ந்த அதிகாரிகளுக்கோ புகைப்படமாக அனுப்பி வைத்தாலோ, தகவல் கொடுத்தாலோ வசூலிக்கப்படும் அபராதத்தொகையில் இருந்து, 10% தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களால் தான் தினமும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், வெளிநாட்டு தூதுவர்கள், பிரதிநிதிகள் நம் நாட்டை இதனால் அலட்சியமாகப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications