தமிழக காவிரி கரையோர மக்களுக்கு மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கர்நாடகாவில் நீர்திறப்பு அதிகரிப்பு...தமிழக காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை- வீடியோ

    டெல்லி: தமிழக ஆற்று கரையோர மக்களுக்கு மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து, 2.1 லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 நாட்களில் அந்த நீர் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    Central water commission, releases fresh warning for Cauvery riverbed

    இதேபோல, மேட்டூர் அணை மற்றும் பவானி சாகர் அணைகளில் இருந்து மொத்தம் 2.6 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்படுவதால், பவானி பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    மேட்டூர் அணை, பவானி சாகர் மற்றும் அமராவதி அணைகளில் இருந்து மொத்தம், 2.8 லட்சம் கன அடி நீர் வர வாய்ப்புள்ளதால், கரூர் மாவட்டம் திருமுக்கூடல் பகுதியிலுள்ள தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+