"காந்தி பிரிட்டிஷ் ஏஜெண்ட்"- கட்ஜூவுக்கு கண்டனம் தெரிவித்து ராஜ்யசபாவில் தீர்மானம்!!
டெல்லி: மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஏஜெண்ட்; அவரது கருத்துகள் முட்டாள்தனமானவை என மிகக் கடுமையாக விமர்சித்திருந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவுக்கு நாடாளுமன்றம் மிகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்ஜூவுக்கு எதிராக ராஜ்யசபாவில் கண்டனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகி ஓய்வு பெற்றவர் மார்க்கண்டேய கட்ஜூ. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. அவரை நீதிபதியாக நியமிக்க தமிழக அரசியல் கட்சி ஒன்று மத்திய அரசை வற்புறுத்தியது எனக் கூறினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் எனவும் பா.ஜ.க. டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியைவிட சாஷியா இல்மி அழகானவர். அவரை நிறுத்தியிருந்தால் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கும் என்பது போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார்.
இந்நிலையில், மகாத்மா காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட் என கூறி புதிய சர்ச்சையை உருவாக்கினார். தமது இணைய தள பக்கத்தில், இப் பதிவு எனக்கு பெரிய தொல்லைகளையும், எதிர்ப்புகளையும் கொடுக்கும் என்பது எனக்குத் தெரியும்.
அது ஒரு பெரிய விஷயமே இல்லை. நான் புகழ் தேடுபவனும் அல்ல. இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதால் எனக்கு பல கண்டனங்களும் வருகிறது. இருப்பினும் நாட்டின் நலன் கருதியே நான் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறேன்.
மகாத்மா காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜண்டாக இருந்தார். மதத்தையும் அரசியலில் புகுத்தி இந்தியாவுக்கு மிகபெரிய தீங்கை செய்து உள்ளார். மேலும், பிரிட்டிஷின் பிரித்தாளும் சூழ்ச்சியை அவர் ஆதரித்தார்.
மகாத்மா காந்தி தொழில் மயமாக்கலுக்கு எதிரானவர். இந்த முட்டாள்தனத்தால் கை நூற்பு இராட்டையை அவர் போதித்தார். இதுபோல் அவர் உபதேசித்த கோட்பாடுகள் அனைத்தும் முட்டாள்தனமானது.
இது மக்களை ஏமாற்றும் செயல் என மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் காந்தி யங் இந்தியா, ஹரிஜன் ஏடுகளில் எழுதியதை மேற்கோள்காட்டி இந்த நாட்டின் தந்தையாக போற்றப்படுகிறவரின் முட்டாள்தனமான கருத்துகளைப் பாருங்கள் என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார் கட்ஜூ.
இது இன்றைய நாடாளுமன்ற கூட்டத்திலும் எதிரொலித்தது. ராஜ்யசபாவில் கட்ஜுவை கண்டித்து ஒரு மனதாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் காந்திஜிக்கும், சுபாஷ் சந்திரபோசுக்கும் எதிராக கட்ஜு கூறியுள்ள கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, கட்ஜூவின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications