டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் அவகாசம்: ஷிண்டே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மிக்கு மேலும் சில நாட்கள் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் சுனில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஆட்சி அமைக்க 36 எம்எல்ஏக்கள் தேவை. பாஜக கூட்டணி 32 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும், சுயேட்சை 2 இடங்களையும் பிடித்தனர்.

Sushilkumar Shinde

32 இடங்களை பிடித்த பாஜக ஆட்சி அமைக்க மேலும் 4 இடங்கள் தேவை. சுயேட்சைகள் தனது ஆதரவைத் தெரிவித்தாலும் கூட அது பாஜக ஆட்சியில் அமர போதுமானதாக இருக்காது. எனவே, அக்கட்சி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது.

அதனைத் தொடர்ந்து, அடுத்த இடத்தில் 28 இடங்களை பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு துணை நிலை ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தது.

ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ ஆட்சி அமைக்க 18 நிபந்தனைகளை காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு விதித்தது. மேலும், தங்களுக்கு 10 நாள் அவகாசமும் கேட்டது. அதற்கு காங்கிரஸ் தரப்பில் பதிலளிக்கப் பட்ட நிலையில், பாஜக தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அங்குள்ள பொதுமக்களிடமே கருத்துக் கேட்க இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 25 லட்சம் கடித நகல்கள் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கான பதில்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

இந்நிலையில், டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு கெடு முடிவடைந்த நிலையில் அதிரடியாக துணைநிலை ஆளுநர் உள்துறை அமைச்சகத்துக்கு சிபாரிசுக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்துமாறு அவர் பரிந்துரைத்தார்.

அந்த சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, சட்ட வல்லுனர்களிடம் கருத்து கேட்ட பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். டெல்லியில் ஆட்சி அமைக்க கடந்த புதனோடு கெடு முடிவடைந்த நிலையில், நேற்று இது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூடி விவாதித்து முடிவெடுக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் நேற்று டெல்லியில் பேசிய ஷிண்டே, 'டெல்லியில் அரசு அமைக்க ஆம் ஆத்மி கட்சி எத்தனை நாள் அவகாசம் கேட்டுள்ளது? என துணைநிலை ஆளுநரிடம் மத்திய அரசு கேட்டுள்ளதாகவும், புதிய அரசு அமைக்க அக்கட்சிக்கு மேலும் சில நாட்கள் அவகாசம் அளிக்கப்படும்' என்றார்.

மேலும் இது ஜனநாயக நடைமுறை என்று கூறிய அவர், மாநிலத்தை வெற்றிடமாக விட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+