டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க போவதில்லை: ஆம் ஆத்மிக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லிக்கு முழுமாநில அந்தஸ்து வழங்க எந்தஒரு திட்டமும் கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

டெல்லிக்கு முழுமாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லிக்கு முழுமாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு எந்த பரிசீலனையும் கொள்ளவில்லை, அப்படிஒரு திட்டமும் கிடையாது என்று மத்திய அரசு பதில் அளித்து உள்ளது.

Centre says no proposal to give full-statehood to Delhi

மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிராதிபாய் சவுதாரி "டெல்லிக்கு முழுமாநில அந்தஸ்து வழங்க எந்தஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை," என்று தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது, பிரசாரம் செய்த பாஜ தலைவர்கள், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், டெல்லிக்கு முழுமாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். அந்தத் தேர்தலின் போது டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சியே வெற்றிபெற்றது.

ஆனால் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது பாரதிய ஜனதா இவ்விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்கவில்லை. தேர்தலின் போது தேர்தல் அறிக்கைக்கு பதில், பாரதிய ஜனதாவின் தொலைநோக்கு திட்டம் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்து, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+