நம்பிக்கையில்லா தீர்மானம் அதிமுக நிலை என்ன? சொல்கிறார் தம்பித்துரை
காவிரி விவகாரத்தில் தமிழக நலனுக்காக போராடுகிறோம், தொடர்ந்து போராடுவோம் என லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் கடந்த ஒருவார காலமாக போரடி வருகின்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும்போது, யாருக்கு ஆதரவு என்பதை அதிமுக முடிவு செய்யும் என்றார்.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். இது போல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது.

சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம் கட்சிக்கு லோக்சபாவில் 16 எம்.பிக்களும் ராஜ்யசபாவில் 6 எம்.பிக்களும் உள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஏமாற்றுவதுதான் பாஜக என தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் விமர்சனம் செய்து உள்ளனர். வரும் திங்களன்று மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளனர்.

ஸ்டாலின் பேட்டி
இதனிடையே அதிமுக எம்பிக்களுக்கு சூடு சொரணை இருந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று திமுக செயல்தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.

ஆதரவு கொடுக்குமா?
நமது தமிழக நலனுக்காக யார் குரல் கொடுத்தார்களோ அவர்களுக்கு மட்டுமே நாம் குரல் கொடுப்போம் ஆதரவு தருவோம். தெலுங்கு தேச கட்சி வேறு பிரச்சினைக்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரச்சினை வேறு வேறு
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக போராடி வருகிறது. சிறப்பு அந்தஸ்து கோரியே தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் போராடுகிறது, இரண்டிற்குமான வித்தியாசம் வேறு என கூறினார்.

அதிமுக ஆதரவு
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனியப்பன் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கப்படாவிட்டால் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியினா் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீா்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று தொிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்!












Click it and Unblock the Notifications