டெல்லியில் சீனா அதிபர் ஜின்பிங்- ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு!
டெல்லி: இந்தியா வருகை தந்துள்ள சீனா அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று பாரம்பரிய வரவேற்பளிக்கப்பட்டது.
சீனா அதிபர் ஜீ ஜின்பிங் மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வருகை தந்தார். குஜராத்தின் அகமதாபாத் நகரில் வந்திறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, சீனா அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் முன்னிலையில் குஜராத் - சீனா இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிறகு மோடி அளித்த விருந்தில் பங்கேற்ற சீனா அதிபர், தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். டெல்லி சென்ற அவர் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் ஜின்பிங்குக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை சீனா அதிபர் ஜின்பிங் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜின்பிங், இந்தியாவும் சீனாவும் நீண்டகால நட்பு நாடுகள். என்னுடைய இந்த முதல் பயணத்தின் மூலம் இருநாட்டு உறவும் பலப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களை ஜின்பிங் சந்தித்துப் பேசுகிறார். அதன் பின்னர் இந்தியாவும் சீனாவும் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும்,
-
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
நாளை முதல் முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! பயண திட்டம் என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications