10 நாட்களாக நீடிக்கும் மீட்பு பணி.. பிரச்னை இதுதானா? உத்தரகாண்ட் சுரங்கம் குறித்து வெளியான தகவல்கள்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், மீட்பு பணியில் இருக்கும் சிக்கல்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது கடந்த 12ம் தேதி திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். மொத்தம் 4.5 கி.மீ நீளம் கொண்ட இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்களும் வெளி வர முடியாதபடி 150 மீ நீளத்திற்கு மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 10 நாட்களாக இவர்களை மீட்க தொடர் முயற்சிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டிருக்கின்றனர். தொடர் முயற்சி காரணமாக அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் உணவு பொருட்களை விநியோகிக்க முடிந்திருக்கிறது. இது உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ஆனாலும், அவர்கள் உள்ளே சிக்கி 10 நாட்கள் ஆகிவிட்டதால் உடனடியாக அவர்களை மீட்க வேண்டும் என சக தொழிலாளர்களும், உறவினர்களும் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர்.
இப்படி இருக்கையில் தற்போது சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. "நாங்கள் இங்கு சிக்கி 10 நாட்கள் ஆகிவிட்டதால் நிலைமை மோசமாகிவிட்டது. எனவே எங்களை உடனடியாக மீட்க வேண்டும்" என வீடியோவில் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதேபோல ஏன் 10 நாட்கள் ஆகியும் சுரங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களை மீட்க முடியவில்லை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, இதுவரை சுரங்கத்தின் வாயிற் பகுதியில் நுழைந்து தொழிலாளர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. காரணம் அங்கிருக்கும் பாறைகளின் தன்மைதான். மற்ற மலை பகுதியில் இருக்கும் பாறைகளை போல உத்தரகாண்ட் மற்றும் இமயமலையை ஒட்டியுள்ள மலையின் பாறைகள் கடினமானவை கிடையாது. இந்த பாறைகளை கையில் எடுத்தாலே உதிரியாய் பெயர்ந்து வரும் அளவுக்கு மென்மையாக இருக்கிறது.
எனவே நுழைவு வாயில் வழியாக உள்ள இடிபாடுகளை அகற்றும்போது மேலும் மண், பாறை சரிவுகள் ஏற்படுகின்றன. இதை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தோண்ட தொடங்கினால் சுரங்கம் முழுமையாக இடிந்து விழும் அபாயம் ஏற்படும். எனவே மீட்பு படையினர், சுரங்கத்தின் மேல் பகுதியிலிருந்த துளை போட்டு அதன் மூலம் தொழிலாளர்களை மீட்க போராடி வருகின்றனர். இந்த முயற்சியிலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் மிகுந்த கவனத்துடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதான் மீட்பு பணிகள் தாமதமாக காரணமாக சொல்லப்படுகிறது.
அதேபோல இவ்வளவு மென்மையாக இருக்கும் மலைகளில் ஏன் சுரங்கம் போன்ற கடினமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்? என இயற்கை ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications