தே.ஜ. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை குறிவைக்கும் சந்திரபாபு நாயுடு?
டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை குறிவைத்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு காய்களை நகர்த்துவதாக கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைவதில் முனைப்பு காட்டி வருகிறார் சந்திரபாபு நாயுடு. இதன் எதிரொலியாகவே பாஜக தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடுகளில் தலையை காட்டி வருகிறார்.

அண்மையில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் பதவியேற்ற நிகழ்ச்சியிலும் கூட சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அவரைப் பொறுத்தவரையில் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை தம் வசமாக்கிக் கொள்வதில்தான் விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிவதால், தெலுங்குதேசம் கட்சி 2 மாநிலங்களிலும் செயல்பட இருக்கிறது. இதனால் தெலுங்குதேசம் கட்சியின் தேசிய தலைவராகும் நிலை சந்திரபாபுவுக்கு உருவாகியுள்ளது. இதனால் தேசிய அரசியலில் வலுவாக காலூன்றிக் கொள்ள நாயுடுவும் விரும்புகிறாராம்.
வரும் லோக்சபா தேர்தலில் தமது வெற்றியை உறுதி செய்யக் கூடிய தொகுதியையும் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்து வருகிறார். இந்த காய்நகர்த்தலுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தவர் சரத் யாதவ். ஐக்கிய ஜனதா தளம் அக்கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் தாம் அந்த பொறுப்புக்கு வர வேண்டும் என்பதற்கான லாபியையும் நாயுடு மேற்கொண்டு வருகிறாராம்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications