2000 ரூபாய்க்கு எங்கு போய் சில்லரை மாற்றுவது.. ரூ. 200 நோட்டை அச்சிடலாம் - சந்திரபாபு யோசனை
மக்களுக்கு ரூ. 2000 நோட்டால் பயன் இருக்காது. மாறாக ரூ. 200 நோட்டை அச்சிட்டு வெளியிடலாம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஹைதராபாத்: சாதாரண மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டு என்பது எந்த பயனையும் தராது. சில்லரை மாற்றுவதில் மிகப் பெரிய பிரச்சினை ஏற்படும். அதற்குப் பதில் 200 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விடலாம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு முதலில் வரவேற்பு தெரிவித்தவர்களில் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். குறிப்பாக 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கூறி வந்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் தற்போது மத்திய அரசின் குழப்பமான செயல்பாடுகளால் சந்திரபாபு நாயுடுவும் கூட அதிருப்தி அடைந்துள்ளார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள 2000 ரூபாய் நோட்டால் எந்த பயனும் ஏற்படாது, மக்களுக்குப் பாதிப்பே அதிகம் ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

2000 ரூபாய் நோட்டால் கஷ்டம்
இதுகுறித்து சந்திரபாபு கூறுகையில் மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டால் கஷ்டம்தான் ஏற்படும். அதற்கு சில்லரை மாற்றுவதற்கு பெரிய கஷ்டத்தை சந்திக்க நேரிடும். இதை ஏன் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.

200 ரூபாய் நோட்டு ஓகே
அதற்குப் பதில் 200 ரூபாய் நோட்ட அச்சிட்டு வெளியிடலாம். அது மக்களுக்கு சுலபமாகவும், வசதியாகவும் இருக்கும். இதுகுறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.

50,100 தட்டுப்பாடு கூடாது
வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளின் கடமையாகும். மக்களுக்கு அதிகமாக தேவைப்படுவது இந்த ரூபாய் நோட்டுக்கள்தான்.

சிறப்பு கவுண்டர்கள் தேவை
மேலும் வங்கிகளில் பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காக தனி கவுண்டர்கள் திறக்கப்பட வேண்டும். மக்கள் கடும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தருவது பாராட்டுக்குரியது.

ரூபாய் நோட்டு ஒழிப்பில் தவறில்லை
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பில் எந்தத் தவறும் இல்லை. அதேசமயம், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை விரைந்து போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கூறினார் சந்திரபாபு நாயுடு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications