Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திராவில் வீசிய சந்திரபாபு நாயுடு அலை.. இப்போது நாடு முழுக்க அலற விடுதே.. அடுத்த பிளான் என்ன

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் வீசிய சந்திரபாபு நாயுடு அலை இப்போது நாடு முழுக்க எதிரொலிக்கிறது. திடீரென மாநிலத்தைத் தாண்டி தேசியளவில் முக்கியமான தலைவராக அவர் உருவெடுத்தது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நமது நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அத்துடன் ஆந்திர மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.

Chandrababu Naidu Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 BJP Congress 2024 2024

ஆந்திரா: ஆந்திராவில் மொத்தம் 175 இடங்கள் இருக்கும் நிலையில், அதில் 88 இடங்களில் வென்றாலே ஆட்சியைப் பிடிக்கலாம். ஆனால், சந்திரபாபு நாயுடு கட்சி அங்கு கிட்டதட்ட க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பதிவு செய்தது. அங்கு 135 இடங்களை சந்திரபாபு நாயுடு மொத்தமாக வென்றார். அவரது கூட்டணியில் போட்டியிட்ட பவன் கல்யாணின் ஜேஎன்பி 21 சீட்களில் வென்றது.. அதேபோல பாஜக 8 சீட்களில் வென்றது.

ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டன. ஜெகன் அமைச்சரவையில் இருந்த ரோஜா தொடங்கிப் பல முக்கிய தலைவர்களும் தோல்வி அடைந்தனர். மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதன் மூலம் ஜெகன் கட்சி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கூட இழந்துவிட்டது. அந்தளவுக்கு ஆந்திர அரசியலில் சந்திரபாபு நாயுடு அலை வீசியுள்ளது. அதில் சிக்கிய ஜெகன் கட்சி சின்னாபின்னமாகிவிட்டது.

நாயுடு அலை: அதேநேரம் சந்திரபாபு நாயுடு அலை இப்போது ஆந்திராவைத் தாண்டியும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.. மக்களில் இல்லை. நம்பர் விளையாட்டில்.. இப்போது சந்திரபாபு நாயுடுவின் ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு ஆக்ஷனும் தேசியளவில் கவனம் பெற்றதாக மாறுகிறது. ஆந்திராவில் கிங்காக மாறி இருக்கும் சந்திரபாபு நாயுடு, தேசியளவிலும் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.

அதற்கு பாஜக மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவாகாமல் போனதே முக்கிய காரணமாகும். கடந்த இரு லோக்சபா தேர்தல்களில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனால் எந்தவொரு கட்சியின் ஆதரவும் தேவைப்படவில்லை. ஆனால், இந்த முறை அவர்களுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சியே அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நம்பர் கேம்: நமது நாட்டில் மொத்தம் 543 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 272இல் வெல்லும் ஒரு கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும். ஆனால் பாஜகவுக்கு 240 சீட்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. இதனால் ஆட்சியை அமைக்கக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நம்பர் கேமில் தான் சந்திரபாபு நாயுடு முக்கிய நபராக உருவெடுத்துள்ளார்.

ஏனென்றால் இப்போது சந்திரபாபு நாயுடு வசம் 16 எம்பிக்கள் உள்ளன. என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்து அதிக எம்பிக்களை கொண்ட கட்சியாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் இருக்கிறது. இதனால் அவரது பேச்சுக்கள் முக்கியமானதாக மாறி இருக்கிறது. அவர் என்டிஏ கூட்டணியிலேயே தொடர்வாரா அல்லது இந்தியா கூட்டணி பக்கம் வருவாரா என்பதில் குழப்பம் இருந்தது. இருப்பினும், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது என்டிஏ கூட்டணியில் தொடர உள்ளதாக அவர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

நிபந்தனைகள்: அதேநேரம் பாஜகவுக்கு ஆதரவு தர அவர் இரண்டு நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்று நீண்ட காலமாக அவர் கோரிக்கை விடுத்து வந்த ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிப்பது... அதை உடனடியாக தர வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். அடுத்து மிக முக்கியமாகச் சபாநாயகர் பதவியை தங்களுக்குத் தர வேண்டும் என்பதாகும்.

இந்த இரண்டு நிபந்தனைகளுக்கு பாஜக என்ன சொல்லப் போகிறது. வரும் காலத்தில் சந்திரபாபு நாயுடுவின் புயல் தேசிய அரசியலில் என்ன செய்யப் போகிறது என்பது சில காலங்களில் தெரிந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+