அப்போ வெறும் 7000 ரூபாய்..இப்போ 6755 கோடி! பால் பேரரசின் முடிசூடா மன்னனான சந்திரபாபு நாயுடு! எப்படி?
அமராவதி: இந்தியாவிலேயே பணக்கார முதல்வர்களின் பட்டியல் வெளியாகி இருக்கும் நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு மட்டும் 931 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் ஏழாயிரம் ரூபாயில் தொடங்கிய அவரது தொழில், இன்று பால் பேரரசின் முடி சூடா மன்னனாக திகழ வைத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கும் நிலையில் தற்போதைக்கு அதன் மதிப்பு 675 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் இன்று நாடு முழுவதும் பேசப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அரசியல் வாழ்க்கை மட்டுமல்லாமல், தொழில்துறையிலும் தனித்த அடையாளம் படைத்தவர் என்ற புகழும் அவருக்கு கிடைத்துள்ளது.
காரணம் - அவர் தொடங்கிய ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் (Heritage Foods Ltd) என்ற பால் நிறுவனம். 1992ஆம் ஆண்டு, பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் இந்திய பால் துறை தனியார் முதலீட்டுக்கு திறக்கப்பட்ட நேரத்தில், சந்திரபாபு நாயுடு வெறும் 7,000 ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் கழித்து, 1994இல் நிறுவனம் ஐபிஓ மூலம் பங்கு சந்தையில் நுழைந்தது.

சந்திரபாபு நாயுடு
ஆச்சரியமாக, அந்த ஐபிஓ, 54 மடங்கு அதிகமாக சந்தாதாரர்களால் கைப்பற்றப்பட்டது. 6.5 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு, ஹெரிடேஜ் புட்ஸ் வலுவான அடிப்படையை அமைத்துக்கொண்டது. 1995ஆம் ஆண்டு நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் வெறும் 25 கோடி இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டளவில் அது 4,500 கோடி வரை உயர்ந்தது. 2024இல் உச்ச கட்டத்தில் 6,755 கோடி மதிப்பீட்டை எட்டியது. தற்போது ஹெரிடேஜ் புட்ஸ் இந்தியாவின் 17 மாநிலங்களில் வியாபாரம் செய்து வருகிறது. சுமார் 3 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக இதன் கூட்டாளிகளாக உள்ளனர்.
ஹெரிடேஜ் புட்ஸ்
2000ஆம் ஆண்டுக்குள் 100 கோடி வருவாய் அடைந்த நிறுவனம், 2025ஆம் ஆண்டில் 4,000 கோடி வருவாயை கடந்துள்ளது. நாரா குடும்பம் தற்போது நிறுவனத்தில் 41.3% பங்குகளை வைத்துள்ளது. 1994இல் நிகர மதிப்பு 9.99 கோடியாக இருந்த ஹெரிடேஜ், இன்று 972 கோடி நிகர மதிப்பை எட்டியுள்ளது. சந்திரபாபு நாயுடு நான்கு முறை ஆந்திர முதல்வராக பதவி வகித்துள்ளார். 2014இல் மாநில பிரிவினை காரணமாக ஆந்திரம் தனி மாநிலமாக உருவான சிக்கலான காலத்தையும், 2004 மற்றும் 2019 தேர்தல் தோல்விகளையும் சமாளித்து, 2024இல் மீண்டும் ஆட்சிக்கு திரும்பினார்.
ஏடிஆர் அறிக்கை
அவரது மனைவி நாரா புவனேஸ்வரி, 1994 முதல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகள் அல்லது அரசியல் தொடர்பான ஒப்பந்தங்கள் இன்றி, விவசாயிகள் சார்ந்த வெளிப்படையான வளர்ச்சி முறைமையைக் கடைபிடித்து வந்ததால், ஹெரிடேஜ் புட்ஸ் ஒரு நம்பகமான பால் நிறுவனமாக உருவெடுத்தது. Association for Democratic Reforms (ADR) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், நாட்டின் முதலமைச்சர்களில் சந்திரபாபு நாயுடுவே அதிக செல்வம் கொண்டவர் என கூறப்பட்டுள்ளது.
பணக்கார முதல்வர்
அவர் அறிவித்த செல்வம் மட்டும் 931 கோடி. இதனால் 1,600 கோடி மொத்தச் செல்வத்தில், அவர் தனியாக மூன்றில் ஒரு பங்கு வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதே பட்டியலில் அருணாசல முதல்வர் பேமா காந்து (163 கோடி), ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் (63 கோடி) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். மிகக் குறைந்த சொத்து வைத்திருப்பவராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (15.38 லட்சம்) உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications