For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல் வயலில் மந்திரம் ஓதினால் விளைச்சல் அமோகமாக இருக்கும்: அமைச்சர் சர்ச்சை பேச்சு

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவா விவசாயத் துறை அமைச்சர் சர்ச்சை பேச்சு

    பனாஜி: வயல்களில் மந்திரம் ஓதினால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று கோவா மாநில விவசாயத் துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் தெரிவித்துள்ளார்.

    பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் கோவா மாநிலத்தில் விவசாயத் துறை அமைச்சராக இருப்பவர் கோவா முற்போக்கு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய்.

    Chant mantras to increase paddy yield: Says minister Vijay Sardesai

    ஷிவ் யோக் பவுன்டேஷன் என்ற அமைப்பு உருவாக்கிய அண்டவெளி விவசாய திட்டத்தை படோர்டாவில் இருக்கும் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வயலில் அறிமுகம் செய்து வைத்தார் விஜய். அதன் பிறகு அவர் கூறியதாவது,

    விளைச்சலை அதிகரிக்கும் நோக்கத்துடன் அண்டவெளி விவசாயத்தை மாநில அரசு ஊக்குவிக்கும். அண்டவெளி விவசாய முறை மூலம் ரசாயன உரங்கள் கலக்காத பாதுகாப்பான உணவு பொருட்கள் கிடைக்கும். இந்த முறைப்படி நெற் கதிர்கள் மீது ரசாயனம் தெளிப்பது இல்லை. இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.

    விளைச்சல் அதிகரிக்க விவசாயிகள் வயலில் நின்று 30 நிமிடங்கள் மந்திரம் ஓத வேண்டும். அப்படி மந்திரம் ஓதினால் அண்டவெளி சக்தி நெற்பயிற்கள் மீது அதிக அளவில் பாயும். பொது வாழ்வில் இருக்கும் அனைவரும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

    English summary
    In a bizarre statement, Goa Agriculture Minister Vijai Sardesai said that the state's paddy yield would increase if its farmers chanted vedic mantra in their fields and adopted "cosmic farming" techniques.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X