என் 17 வயது மகளை சாகடித்துவிட்டனர்: நீதி கேட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு தந்தை கடிதம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் பள்ளி தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் தரக்குறைவாக பேசியதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி கமலிகாவின் தந்தை நீதிகேட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் +1 படித்து வந்தவர் கமலிகா தாஸ்(17). வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் அவர் இந்தி வீட்டுப்பாடம் செய்ய மறுந்துவிட்டார். இதனால் தனது வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவரின் வீட்டுப்பாட நோட்டை கடன் வாங்கி அதில் தனது பெயரை எழுதி, வீட்டுப்பாடத்தையும் எழுதி சமர்பித்துவிட்டார்.

இதையடுத்து கடந்த 19ம் தேதி அந்த மாணவர் அதே நோட்டை ஆசிரியையிடம் சமர்பிக்க அதில் கமலிகாவின் பெயர் இருந்தது. இதனால் கமலிகா செய்த விஷயம் ஆசிரியருக்கு தெரிய வந்தது. இதையடுத்து வகுப்பாசிரியரும், இந்தி ஆசிரியரும் சேர்ந்து கமலிகாவை தலைமை ஆசிரியையிடம் அழைத்துச் சென்றுள்ளனர். மறுநாள் அதாவது 20ம் தேதி கமலிகாவின் தாயை பள்ளிக்கு வரவழைத்து பேசியுள்ளனர்.
அவரிடம் உங்களின் மகளின் நடத்தை சரியில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த கமலிகா சில ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் தங்கியிருந்த 7 மாடி கட்டிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரின் தந்தை கிஷோலோய் தாஸ் கூறுகையில்,
என் மனைவி முன்பு என் மகளை நடத்தை கெட்டவள் என்று தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் மகள் சக மாணவன் மீது பாலியல் புகார் தெரிவித்தார். நடந்தது அந்த மாணவனின் தவறு அல்ல, உங்கள் மகளின் தவறு தான் என்று தெரிவித்துள்ளனர். அடங்காத உங்கள் மகளை பள்ளியை விட்டு நீக்குவோம் என்று தெரிவித்துள்ளனர் என்றார்.
இறப்பதற்கு முன்பு கமலிகா தனது டைரியில் பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு கடிதம் எழுதி வைத்துள்ளதை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த 24ம் தேதி கமலிகாவின் மரணத்திற்கு அவரின் பள்ளி தலைமையை ஆசிரியை ஸ்னிக்தா தேப், இந்தி ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் தான் காரணம் என்று கூறி அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
கமலிகாவின் முடிவுக்கு காரணமானவர்களை கண்டித்து பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களிலும் கமலிகாவுக்கு நீதி கேட்கப்பட்டது. இதையடுத்து நீதி கேட்டு கமலிகாவின் தந்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கமலிகாவின் மரணத்தை அடுத்து அவரின் தாய் அவருடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். மகளின் நியாபகம் வாட்டுவதால் கிஷோலோய் வீட்டில் தங்குவது இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications