சடலத்துடன் உடலுறவு கொள்வது பலாத்காரமாகாது! 9 வயது சிறுமி வழக்கில் சத்தீஸ்கர் ஹைகோர்ட் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சடலத்துடன் உடலுறவு கொள்வது என்பது பலாத்காரமாகாது என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

கரியாபந்து மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 9 வயது தலித் சிறுமியை காணவில்லை என போலீஸில் புகார் வந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

court legal

இதையடுத்து அந்த உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பிரேத பரிசோதனை முடிவில்தான் திடுக் தகவல்கள் வெளியாகின. அதாவது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அது மட்டுமல்லாமல் அந்த சிறுமி இறந்த பிறகும் அந்த சடலத்துடன் உடலுறவு செய்யப்பட்டிருந்த அதிர்ச்சி தகவலும் வெளியானது. இது குறித்த வழக்கில் நீல்காந்த், நிதின் யாதவ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நீல்காந்த் போக்சோ வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நீல்காந்த்தை போக்சோ வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமியின் பெற்றோர் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா, பிபு தத்தா குரு ஆகியோர், 9 வயது சிறுமியின் வழக்கில் போக்சோ அல்லது பலாத்கார குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.

சடலத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்வது என்பது நெக்ரோபிலியா என்பதாகும். பாலியல் வன்கொடுமை குற்றம் நடந்திருந்தால் அதனால் பாதிக்கப்பட்ட பெண் உயிருடன் இருந்திருக்க வேண்டும். வன்கொடுமைக்கு பிறகு கொலை செய்வது என்பது தனி வழக்கு என நீதிபதிகள் தெரிவித்தனர். சடலத்துடன் உடலுறவு கொள்வது என்பது பாலியல் பலாத்காரமாகாது என நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் ஆதாரங்களை அழித்த நீல்காந்திற்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அது போல் மற்றொரு வழக்கில், பலாத்கார புகாரில் இரு தரப்பும் சமரசமானாலும் வழக்கை கைவிட முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருந்தது.

அதாவது ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் 16 வயது மாணவியை பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பும் சமரசமான போதுதான் உச்சநீதிமன்றம் மேற்கண்டவாறு அதிரடி தீர்ப்பை வழங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+