சத்தீஸ்கர்: 'மாவோயிஸ்டு’ கோட்டையில் தேர்தல்-’முதல் முறையாக’ ஓட்டு போடும் 120 கிராமங்களின் ஆதிகுடிகள்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: மாவோயிஸ்டுகள் இன்னமும் செல்வாக்காக இருக்கக் கூடிய கடைசி பகுதியான சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நாடு விடுதலைக்குப் பின் 120 கிராமங்களை சேர்ந்த பழங்குடி மக்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநில தேர்தல் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ல் எண்ணப்படும்.

Chhattisgarh: 120 tribals villages of Maoist Bastar to vote first time

மாவோயிஸ்டுகள்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தான் பிராந்தியம் என்பது மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருந்தது. இங்கு ஜனநாயகமே எட்டிப் பார்க்க முடியாத படி, தேர்தல் பாதையில் நம்பிக்கையற்ற மாவோயிஸ்டுகள் முட்டுக்கட்டையாக இருந்து வந்தனர். மாவோயிஸ்டுகளை மீறி வாக்கு சாவடிகளை அமைக்க முடியாது; அப்படி பாதுகாப்புடன் அமைக்கப்படும் வாக்கு சாவடிகளில் பொதுமக்கள் வாக்களிக்க முடியாது; மாவோயிஸ்டுகளை மீறி வாக்களித்தால் மக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலைமைதான் இருந்து வந்தது.

மாவோயிஸ்டுகள் கோட்டையில்..: அண்மைகாலமாக மாவோயிஸ்டுகள் கை தளர்ந்து போய்விட்டது. மலைகளை உள்ளடக்கிய வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து வந்த பழங்குடிகள் பொதுநீரோட்டத்தில் வெகுவாகவே இணைந்துவிட்டனர். மாவோயிஸ்டுகளின் நெட் ஒர்க் நசுக்கப்பட்டு அப்பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் பஸ்தார் பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் 126 புதிய வாக்குச் சாவடிகள் இம்முறை அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

Chhattisgarh: 120 tribals villages of Maoist Bastar to vote first time

126 புதிய வாக்கு சாவடிகள்: பஸ்தார் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள 126 புதிய வாக்கு சாவடிகளில் 15 கன்கேர் தொகுதி, 12 அந்தகார் தொகுதி, 5 பானுபிரதப்பூர், 20 கொண்டா, 14 சித்ரகோட், 4 ஜகதல்பூர், 1 பஸ்தான், 13 கொண்டகோன், 19 கேஷ்கால், 9 நாரயண்பூர், 8 தண்டேவடாவில் அமைக்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கர் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்த மொத்தம் 65 புதிய பாதுகாப்பு படை முகாம்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு சாவடிகளில் 120 கிராமங்களை சேர்ந்த பழங்குடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்திய விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாக இந்த பழங்குடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். தங்களது கிராமங்களுக்கு அருகேயே இம்முறை வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதால் எளிதாக வாக்களிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் இந்திய நிலத்தின் பூர்வகுடிகள்.

மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை: இந்த முறையும் சில இடங்களில் மாவோயிஸ்டுகள் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கம் போல போஸ்டர்கள், பேனர்களை தொங்க விட்டுள்ளனர். தேர்தல் பாதை மூலம் மக்கள் விடுதலை சாத்தியம் இல்லை; யுத்தம் மூலமே மக்கள் விடுதலை சாத்தியம் எனவும் அந்த பேனர்களில் எழுதப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+