சத்தீஸ்கரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. 7 மாதத்தில் 138 'நக்சல்களை' முடித்த 'தமிழர் சுந்தரராஜ்'
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 7 மாதங்களில் மொத்தம் 136 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மண்டல ஐஜியாக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தரராஜ் பட்டிலிங்கம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்னமும் மலைக் காடுகளில் பதுங்கி இருந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். மலைகளில் பழங்குடி மக்களை கேடயமாக பயன்படுத்தி பதுங்கி வாழ்கின்றனர் மாவோயிஸ்டுகள்.

மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்க பல்வேறு பாதுகாப்புப் படைகள் களமிறங்கி வேட்டையாடி வருகின்றன. சத்தீஸ்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதி பஸ்தர். இந்த மண்டலத்தின் ஐஜியாக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தரராஜ் பட்டிலிங்கம். மிக நீண்ட காலம் பஸ்தாரில் பணியாற்றியதால் மாவோயிஸ்டுகளை மிக எளிதாக வேட்டையாடி வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் 29 மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மே மாதம் 10-ந் தேதி 12 மாவோயிஸ்டுகள் அழிக்கப்பட்டனர். ஜூன் மாதம் 7-ந் தேதி 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஜூன் 15-ந் தேதி 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் பஸ்தார் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சகோதரரை கடத்திச் சென்று படுகொலை செய்தனர் மாவோயிஸ்டுகள். போலீஸ் உளவாளியாக செயல்பட்டவர் என சந்தேகித்து மாவோயிஸ்டுகள் இந்த படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து நாராயண்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் நடவடிக்கை மீண்டும் முடுக்கிவிடப்பட்டது. அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கு தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் பஸ்தார் ஐஜி சுந்தரராஜ் பட்டிலிங்கம். சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 மாதங்களில் மொத்தம் 138 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 136 பேர் பஸ்தார் மண்டலத்தில் அழிக்கப்பட்டனர்.
யார் இந்த சுந்தரராஜ்?: பஸ்தாரில் 2004-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். துணை காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியை தொடங்கிய சுந்தரராஜ் தற்போது பஸ்தார் மண்டல் ஐஜியாக பொறுப்பு வகிக்கிறார். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையை எப்படி ஒருங்கிணைத்தால் எப்படி வெல்ல முடியும் என்ற வியூகம் அறிந்தவர். 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மாவோயிஸ்டுகள் பஸ்தாரில் கோரத்தாண்டவம் ஆடியிருந்தனர். அப்போதும் மாவோயிஸ்டுகளை எதிர்கொண்டவர் தற்போதைய பஸ்தார் மண்டல ஐஜி சுந்தரராஜ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications