பிரதமரையே அலறவிட்ட "மாட்டு சாணம்"! ஆனாலும் நக்ஸல் மைதானத்தில் செமி ஃபைனலில் இப்படி ஒரு ரிசல்ட்டா?
ராய்ப்பூர்: பிரதமரே பாராட்டிய மாட்டுச் சாண திட்டம் சத்தீஸ்கரில் காங்கிரஸின் வெற்றிக்கு கைக்கொடுக்குமா என எதிர்பார்த்த நிலையில் அக்கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதாவது நவம்பர் 7, 17 ஆகிய இரு தேதிகளாகும். இந்த மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

அது போல் 11 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. இந்த நிலையில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 46 இடங்களில் வென்றால் அந்த கட்சியே ஆட்சியை அமைக்கும்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியை பிடித்தது. வெறும் 15 இடங்களில் வென்று பாஜக தோல்வி அடைந்தது. 5 தொகுதிகளில் வென்றது முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் கட்சி. அந்த வகையில் இந்த முறை பாஜக, காங்கிரஸுக்கு இடையே பெரும் போட்டி நிலவுகிறது.
சத்தீஸ்கரில் நக்ஸல்களின் ஆதிக்கம் நடக்கும் போதிலும் காங்கிரஸ் கட்சி பல்வேறு புரட்சிகளை செய்துள்ளது. அதில் ஒன்றுதான் 144 கிராமங்கள் முதல் முறையாக மக்கள் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி வாக்களித்தனர். இதன் கோபத்தைத்தான் அன்று சுக்மா மாவட்டத்தில் வெடிகுண்டை நக்ஸல்கள் வெடிக்க செய்தனர்.
காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டது. அந்த வகையில் மாட்டுச் சாணத்தை விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ 2 க்கு வாங்கி அதை உரமாக்கி அவர்களுக்கே விலைக்கு கொடுக்கும் திட்டத்தை பாகல் அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தது.
இதற்கு பெயர் கோ தன் நியாய் யோஜனா என்பதாகும். இந்த திட்டத்தின்படி மாட்டுச் சாணத்தை விவசாயிகளிடம் இருந்து வாங்கி அதை மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைத்து அதை மண் புழு உரமாக மாற்றி மீண்டும் விவசாயிகளிடமே விலைக்கு கொடுக்கும் உன்னதமான திட்டம் இதுவாகும். அதிலும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதுவரை 68 கோடி மதிப்பிலான மாட்டுச் சாணத்தை மண்புழு உரம் தயாரிக்க சத்தீஸ்கர் அரசு வாங்கியுள்ளது. அது போல் மாட்டு கோமியத்தையும் கொள்முதல் செய்து இயற்கை உரமாக உருவாக்கும் முயற்சிகளையும் அரசு எடுத்துள்ளது. ரசாயனம் கலந்த உரங்களை காட்டிலும் இயற்கையாக தயாரிக்கும் மண் புழு கலந்த உரத்தை பயிர்களுக்கு இடுவதன் மூலம் நல்ல மகசூலை கொடுக்கும். விவசாயிகளுக்கு அதிக லாபத்தை தருகிறதோ இல்லையோ நஷ்டம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
இப்படிப்பட்ட திட்டத்தை கடந்த ஆண்டு நடந்த நிதி ஆயோக் திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டினார். அந்த மாநிலத்தின் அடிப்படை பிரச்சினைகளான நக்ஸல்கள், விவசாயிகளின் பிரச்சினை உள்ளிட்டவைகளுக்கு தீர்வுகளை கொடுக்கும் பாகல் அரசு வெல்லுமா இல்லை அடிநாதமான அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என பாஜக தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முந்துவது போல் இருந்தது. ஆனால் நேரம் ஆக ஆக ஆட்டமே மாறுகிறது. மாநில முதல்வர் பூபேஷ் பாகலே பதான் தொகுதியில் மிகவும் போராடி வருகிறார். காங்கிரஸ் கட்சி 35 இடங்களிலும் பாஜக 54 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.












Click it and Unblock the Notifications