சத்தீஸ்கர்.. எதிர்பாராத ட்விஸ்ட்.. அடித்து நொறுக்கி ஆட்சியை கைப்பற்றும் பாஜக .. காங்கிரஸ் அதிர்ச்சி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகளின் முடிவுகளையும் தாண்டி பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரப்போகிறது. பாஜகவின் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்க காங்கிரஸ் கட்சியினரோ அதிர்ச்சி மனநிலைக்கு மாறியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்ட பின் 2000 முதல் 2003ஆம் ஆண்டுவரை மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது அஜித் ஜோகி முதல்வராக இருந்தார். அதன்பின் 2003 முதல் 2018-ம் ஆண்டு வரை பாஜக வெற்றி பெற்று தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, அஜித் ஜோகி தலைமையிலான ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர், கோண்ட்வானா கண்ட்தந்திரா கட்சி ஆகியவை போட்டியிட்டன. 15 ஆண்டுகாலம் ஆட்சிக்கட்டிலில் இருந்த பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி அரியணை ஏறியது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 68 இடங்களில் வெற்றி பெற்றது. பெற்ற வாக்குகள் 61,36,429 (43.0%), பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பெற்ற வாக்குகள் 47,01,530 (33.0%). ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜேசிசி) 5 இடங்களில் வெற்றி பெற்றது. வாக்குகள் 10,81,760 (7.6%) , பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றது வாக்குகள் 5,51,687 (3.9%).
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 56 இடங்களில் பாஜக முன்னணியில் உள்ளது. சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க 46 உறுப்பினர்கள் இருந்தால் போதுமானது. அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக.
5 ஆண்டுகளில் ஆட்சிக்கட்டிலில் இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது அரியணையை இழக்கப்போகிறது. கருத்துக்கணிப்புகள் எல்லாமே காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக கூறப்பட்ட நிலையில், தற்போது பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதி கை கொடுத்துள்ளது. திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதி யுதவி அளிக்கப்படும். சத்தீஸ்கரில் 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் ரூ.500 க்கு வழங்கப்படும் என்று பெண்களுக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு, பயணப்படி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 2 ஆண்டுகளில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். தீன்தயாள் உபாத்யாய் கிரிஷி மஜ்தூர் திட்டத்தின் கீழ் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.
கிரிஷி உன்னதி திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் தலா ரூ.3,100-க்கு கொள்முதல் செய்யப்படும். அயோத்தியில் ராமர் கோயிலை பார்வையிட மக்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த சட்டசபை தேர்தலை எதிர்கட்சியினர் பலரும் செமி பைனல் என்று வர்ணித்தனர். இந்த நிலையில் 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் பாஜக பெரும்பான்மையை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜக 56 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேசமயம், மற்றவர்கள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் 40 முதல் 50 இடங்களிலும், பாஜக 36 முதல் 46 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது. மற்றவர்களுக்கு 1 முதல் 5 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
டிவி 5 நியூஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 54-66 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியிருந்தது. பாஜக 29-39 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, பாஜக 36-48 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் 41-53 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தது.
இந்தியா டிவி நிறுவனம் பாஜக 30-40, காங்கிரஸ் 46-56 என்று கருத்துக்கணிப்பில் தெரிவித்திருந்தது. இதே போல ஆஜ் தக் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜக 36-46, காங்கிரஸ் 40-50 வெல்லும் என்று தெரிவித்திருந்தது. ஜன் டிவி கருத்துக்கணிப்பில், பாஜக 34-45 இடங்களில் வெல்லும் என்றும் காங்கிரஸ் கட்சி 42 முதல் 53 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் தெரிவித்திருந்தது.
கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொய்த்துப்போய் விட்டன. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டு பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரப்போகிறது. பாஜகவின் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்க காங்கிரஸ் கட்சியினரோ அதிர்ச்சி மனநிலைக்கு மாறியுள்ளனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications