நக்சல் பாதிப்பு காரணம்.. சட்டீஸ்கரில் மட்டும் இருகட்டங்களாக தேர்தல்.. தேர்தல் ஆணையர் அறிவிப்பு!
சத்தீஷ்கரில் நவம்பர் 12ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் அறிவித்துள்ளார்.
டெல்லி: சத்தீஷ்கரில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக நவம்பர் 12ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக நவம்பர் 20ஆம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் அறிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைப்பெற்று வரும் மாநில அரசின் ஆட்சி இந்தாண்டின் இறுதியில் முடிவடைகிறது.
இந்நிலையில் இம்மாநிலங்களுக்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
[தெலுங்கானா, மபி, சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.. டிச. 11ல் ரிசல்ட்]

சத்தீஷ்கருக்கு 2 கட்டங்களாக
அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, சத்தீஷ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

நக்சல் அச்சுறுத்தல்
18 தொகுதிகளுக்கு மட்டும் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும். நக்சல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள இந்த 18 தொகுதிகளிலும் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

நவ.20ல் 2ஆம் கட்டம்
இதைத்தொடர்ந்து 2வது கட்ட தேர்தல் நவம்பர் 20ம் தேதி நடைபெறும். மேலும் சத்தீஷ்கரின் தெற்கு பகுதிகளில் அக்டோபர் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். சத்தீஷ்கரில் அக்டோபர் 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

ராஜஸ்தான், தெலுங்கானா
இதேபோல் மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.

11ல் ஓட்டு எண்ணிக்கை
இதைத்தொடர்ந்து சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் அறிவித்துள்ளார்.

ஒப்புகை சீட்டு
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் ஓபி ராவத் தெரிவித்துள்ளார். 4 மாநில தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில் ஒப்புகை சீட்டு எந்திரம் பயன்படுத்தப்படும் என்றும் ஓபி ராவத் தெரிவித்தார்.
Model of conduct to come into force in Madhya Pradesh, Rajasthan, Chhattisgarh and Mizoram with immediate effect: Chief Election Commissioner OP Rawat in Delhi pic.twitter.com/db5PLnNGb9
— ANI (@ANI) October 6, 2018
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications