Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சாண்டா கிளாஸை வெளியே போடுங்க!" கிறிஸ்துமஸ் அலங்காரங்களை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்! பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: பாஜக ஆளும் சத்தீஸ்கரின் ராய்ப்பூர் உள்ள மால் ஒன்றில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களைச் செய்யப்பட்டிருந்த நிலையில், அதை மர்மக் கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. இது அங்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உருட்டுக் கட்டைகளுடன் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்காரங்களைச் சேதப்படுத்தியது.

இந்தாண்டு உலகெங்கும் கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தாண்டு சில மோசமான சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் பஜ்ரங் தள் உறுப்பினர் சிலர் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்குச் சென்றவர்களைத் தடுத்தது பெரும் சர்ச்சையாகி இருந்தது.

Chhattisgarh Christmas

பரபரப்பு

இதற்கிடையே பாஜக ஆளும் சத்தீஸ்கரின் ராய்ப்பூர் உள்ள மால் ஒன்றில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களைச் செய்யப்பட்டிருந்த நிலையில், அதை மர்மக் கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. இது அங்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உருட்டுக் கட்டைகளுடன் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்காரங்களைச் சேதப்படுத்தியது.

சட்டவிரோத மத மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 'சத்தீஸ்கர் பந்த்' நேற்று நடந்த நிலையில், அப்போது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.. பாதுகாப்பு ஊழியர்கள் தடுக்க முயன்ற போதும், அவர்களைத் தள்ளிவிட்டுவிட்டு கிறிஸ்துமஸ் அலங்காரங்களை இந்த கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது.

என்ன நடந்தது

இது தொடர்பாகப் பெயர் வெளியிடாத மால் ஊழியர் ஒருவர் கூறுகையில், "திடீரெனச் சுமார் 80-90 பேர் உள்ளே புகுந்தனர். நாங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தாலும், இப்படிப்பட்ட வன்முறையைப் பார்த்ததில்லை. கடந்த 16 ஆண்டுகளாக அனைத்து பந்த் அழைப்புகளுக்கும் நாங்கள் எப்போதும் ஆதரவு அளித்தோம். ஆனால் கும்பல் எங்களை மிரட்டி, வன்முறையில் ஈடுபட்டது. சில பெண்கள் அழுது கொண்டிருந்தனர். தடுத்து நிறுத்த முயற்சி செய்தவர்களை அவர்கள் தாக்கினார்கள். சான்டாவைப் பார்க்க விரும்பவில்லை சொல்லிச் சொல்லித் தாக்கினர்" என்றார்.

காரணம் யார்

இந்தத் தாக்குதலை நடத்தியது எந்தக் கும்பல் என்று தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. முன்னதாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலிருந்து இந்துக்கள் விலகி இருக்க வேண்டும் என விஹெச்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தொடரும் வன்முறை

சத்தீஸ்கரில் இதுபோன்ற சம்பவம் நடப்பது முதல்முறை இல்லை. இதே சத்தீஸ்கர் மாநிலத்தில் கான்கர் மாவட்டத்தில், டிசம்பர் 17-18 தேதிகளில் மர்ம கும்பல் இரண்டு தேவாலயங்களில் தீ வைத்தது. மேலும், வீடுகளைச் சேதப்படுத்தியதாகவும், போலீசாருடன் மோதியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி லாஜ்பாட் நகரில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மதம் மாற்றம் செய்ய முயல்வதாகச் சொல்லி பிரச்சனை செய்தனர். அதேபோல மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் என்ற பகுதியில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் பங்கேற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண்ணை பாஜக நகரத் துணைத் தலைவர் அஞ்சு பார்கவா தாக்கித் திட்டிய வீடியோவும் பகீர் கிளப்பியது.

அறிக்கை

இதுபோன்ற சம்பவங்களைத் தொடர்ந்து கத்தோலிக்கத் தலைமைக் குழுவான இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நடக்கும் இதுபோன்ற செயல்கள் வேதனை அளிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றம் எனச் சொல்லி இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் ஆயர்கள் சுட்டிக்காட்டினர்.

மத சுதந்திரம், வழிபடும் உரிமை ஆகிய அரசியலமைப்பு உரிமைகளுக்கு இவை அச்சுறுத்தல் எனக் குறிப்பிடப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+