5.5 சதவீத பொருளாதார வளர்ச்சி நிச்சயம் - சிதம்பரம் நம்பிக்கை

அமெரிக்காவின் "உலக அமைதிக்கான கார்னெஜீ அறக்கட்டளை' ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற அவர் பேசியதாவது:
"நல்ல பருவமழை, அமோக விளைச்சல், கடந்த ஓராண்டாக மத்திய அரசு எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக 2013-14-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 முதல் 5.5 சதவீதத்தை எட்டும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.75 சதவீதம்தான் இருக்கும் என்று கூறிய சர்வதேச நிதியம் என்னுடைய இந்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாது என்பது எனக்குத் தெரியும். அதே போல், நானும் அவர்களது அவநம்பிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
இந்தியாவின் நிதியமைப்பு, மனிதவளம், வலிமையான நிறுவனங்கள் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
தற்போதுள்ள உலகப் பொருளாதார சூழலில் 5 சதவீதம் என்பது நல்ல வளர்ச்சியாகத் தோன்றினாலும், 2004-இல் நாங்கள் நிர்ணயித்த இலக்குகளோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவுதான்.
ஆண்டுக்காண்டு இந்தியாவின் நிதியமைப்பு வலிமையாகி வருகிறது.
அந்நிய நேரடி முதலீடு: சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் விவகாரத்தில், இந்தியா குறிப்பிட்ட செயல்திட்டங்களை வகுத்துள்ளது. முதலீட்டாளர்கள் அந்த செயல்திட்டங்களுக்கு உள்பட்டுதான் செயல்படவேண்டும். அதை மாற்றுவது என்பது இயலாத காரியம்.
இந்த நிதியாண்டுக்குள் ஓரிரு பன்னாட்டு சில்லறை வர்த்த நிறுவனங்கள் இந்தியாவில் தடம் பதிக்கலாம்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்," என்றார் ப. சிதம்பரம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications