ஜம்மு, காஷ்மீருக்கு அனைத்து கட்சிகள் அடங்கிய குழு... ப. சிதம்பரம் வலியுறுத்தல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு அனைத்து கட்சிகள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. தற்போதுதான் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 45 நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றம் நிறைந்த சூழ்நிலைக்கு தீர்வு காண பிரதமர் விடுத்த அழைப்பினை காங்கிரஸ் கட்சி நேற்று குறை கூறியிருந்தது. அக்கட்சியினை சேர்ந்த செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி, பிரதமரின் பேச்சு மாறி கொண்டே இருக்கிறது. அனைத்து கட்சி கூட்டத்தில் அவர் பேசியது என்ன?, சுதந்திர தின உரை என்ன? இன்று பேச்சுவார்த்தை பற்றி பேசுகிறார். ஆனால் யாருடன் பேச வேண்டும்? அவர் துரதிர்ஷ்டவசமுறையில் யோசிக்காமல் வேகமுடன் செயல்படுகிறார். முக்கியத்துவம் இல்லாத விசயங்களை பற்றி பேசி நேரத்தினை செலவிடுகிறார் என நேற்று சாடி பேசினார்.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான எதிர்க்கட்சியினர் அடங்கிய குழுவினருடன் மோடி 75 நிமிடங்கள் வரை நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரச்னைகளுக்கு தீர்வு ஒன்றினை காண அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் நிரந்தர மற்றும் இறுதியான தீர்வினை காண பேச்சுவார்த்தை அவசியம் என்பதனை வலியுறுத்திய பிரதமர், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ஜம்மு, காஷ்மீரில் எதிர்க்கட்சிகள் அடங்கிய குழு மற்றும் பிரதமர் இடையேயான சந்திப்பு புதிய சிந்தனையின் முதல் அடையாளம் என்றால் வரவேற்க வேண்டும். காஷ்மீர் பகுதிக்கு அனைத்து கட்சி குழு ஒன்றினை அனுப்ப வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications