பொறுப்பா பேசுங்க... காஷ்மீருக்கு சுயாட்சி கொடுக்க சொன்ன ப.சி.க்கு காங். குட்டு
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு அதிக சுயாட்சி கொடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 2 வாரங்களாக ராணுவத்துக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது. இதில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ராணுவத்தினர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்மாநிலத்தில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். எந்த பேரத்தின் கீழ், காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதோ, அந்த வாக்குறுதியை நாம் காப்பாற்றாமல் விட்டு விட்டோம். காஷ்மீருக்கு அதிகபட்ச சுயாட்சி அளிப்பதன் மூலம் அந்த பேரத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், நாடு அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் கூறுகையில், ப.சிதம்பரம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அது ஓர் உணர்வுப்பூர்வமான விவகாரம். எனவே, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பொறுப்பான கருத்துதான் வர வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications