மிசோராமில் தஞ்சம் புகுந்த மியான்மர் நாட்டு முதலமைச்சர்.. 24 எம்எல்ஏக்களும் வருகை.. பரபரக்கும் எல்லை
கொல்கத்தா: மியான்மரில் வெடித்த ராணுவ புரட்சியைத் தொடர்ந்து அந்த நாட்டின், சின் மாநில முதல்வர் சலாய் லியன் லுவாய், இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு சின் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றவர் சலாய். திங்கள்கிழமை இரவு அவர் எல்லை நகரமான சம்பாய் வழியாக மிசோராம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளார். இது மாநில தலைநகர் ஐஸ்வாலில் இருந்து 185 கி.மீ தூரத்தில் உள்ள பகுதியாகும்.
மேற்கு மியான்மரில் உள்ள சின் மாநிலம் 510 கி.மீ தூரத்திற்கு மேற்கு எல்லையை மிசோரம் மாநிலத்தின், சம்பாய், சியாஹா, லாங்ட்லாய், செர்ச்சிப், ஹன்ன்தியல் மற்றும் சைச்சுவல் ஆகிய ஆறு மாவட்டங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அந்த அளவுக்கு மியான்மர் மற்றும் மிசோராம் நெருக்கமானவை.

எம்எல்ஏக்கள் வருகை
மியான்மரில் வடக்கு பகுதி மணிப்பூர் மற்றும் அதன் தென்மேற்கு பகுதி பங்களாதேஷுடன் ஒட்டியுள்ளது.
சாய் லியன் லுவாய் மட்டுமல்ல 23 சட்டமன்ற உறுப்பினர்களும் மிசோராமில் தஞ்சமடைந்துள்ளனர். ஆங் சான் சூகி கட்சியினரும் இதில் அடங்குவர்.

9000 மக்கள்
24 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக மியான்மர் எல்லையில் உள்ள மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சுமார் 9000 பொது மக்களும் இந்தியாவிடம் தஞ்சமடைந்துள்ளனர்.

மாவட்டங்கள்
இதுவரை வெளியான தகவல்களின்படி, 1,633 பேர் ஐஸ்வாலில் தஞ்சம் அடைந்துள்ளனர், லாங்ட்லாய் மாவட்டத்தில் 1,297, சியாஹா மாவட்டத்தில் 633, ஹன்னாத்தியல் மாவட்டத்தில் 478, லுங்லே மாவட்டத்தில் 167, செர்ச்சிப் மாவட்டத்தில் 143, சைச்சுவல் மாவட்டத்தில் 112, கோலாசிப் மாவட்டத்தில் 36 மற்றும் 28 பேர் கவ்ஸால் மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

மிசோராம் அரசு உதவி
சிவில் சமூகம், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார். பலருக்கும் உள்ளூர்வாசிகள் தஞ்சம் அளித்துள்ளனர்.
மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தனது மாநிலத்தில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு நிவாரண உதவி செய்ய தனது அரசு பணம் ஒதுக்கியுள்ளது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications