சோக சம்பவம்.. பெற்றோர் இறந்தது தெரியாமல் அவர்களுடன் விளையாடிய 3 வயது சிறுவன்
ஹூப்பள்ளி: ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோர்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை அறியாமல் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனின் செயல் அனைவரது மனதையும் உருக்குவதாக இருந்தது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ஈரன்ன தல்வார் மற்றும் மஞ்சுளா ஆகியோர் 3 வயது மகன் தேவராஜூடன் முனிராபாத்தில் உள்ள ஹூளிகம்மா கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் முடித்து கொண்டு முனிராபாத் ரயில் நிலையத்துக்கு நள்ளிரவில் வந்துள்ளனர். அங்கு மகனுடன் படுத்து தூங்கியுள்ளனர். காலை வெகு நேரமாகியும் தல்வார் மற்றும் மஞ்சுளா கண்விழிக்கவே இல்லை.

ஆனால் 3 வயது சிறுவன் தேவராஜ் எழுந்துவிட்டான். பெற்றோர்கள் தூங்குவதாக நினைத்து கொண்ட சிறுவன் அங்குள்ள பிளாட்பாரத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். பின்னர் வெகு நேரம் ஆகியும் பெற்றோர்கள் கண் விழிக்காததை கண்டு சிறுவன் அழத்தொடங்கியுள்ளான்.
இதை பார்த்த ரயில்வே பயணிகள் சிலர் அவர்களின் அருகில் சென்று பார்த்தபோது, சிறுவனின் அம்மா, அப்பா இறந்திருந்தது தெரியவந்தது. உடனே ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் சிறுவனிடம் விசாரிக்கையில், சிறுவன், 'நாங்கள் கோயிலுக்குச் செல்வதற்காக வந்தோம். ஆனால் என் பெற்றோர்கள் இங்கு உறங்கிவிட்டனர். பலமுறை எழுப்பியும் இவர்கள் எழவில்லை' என கண்ணீருடன் கூறியுள்ளான்.
அந்தச் சிறுவனிடம் பெற்றோர் இறந்துவிட்டார் எனக் கூறமுடியாமல் ரயில்வே போலீஸாரும் பயணிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் சிறுவனை அவரது உறவினர்களிடம் அல்லது காப்பகத்தில் ஒப்படைக்கப் போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications