இந்தியாவில் தாக்குதல் நடத்த வடகிழக்கு மாநில தீவிரவாதிகளுக்கு பயிற்சி, ஆயுதம் தரும் சீனா!
கோஹிமா: இந்தியாவில் தாக்குதல்களை நடத்த வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரி வரும் தீவிரவாதிகளுக்கு சீனா ஆயுதமும் பயிற்சியும் அளித்து வருவது அம்பலமாகி உள்ளது. மியான்மர் எல்லை பகுதியை புதிய போர் முனையாக்க சீனா முயற்சிப்பதையே இது வெளிப்படுத்துகிறது.
லடாக், அருணாச்சல பிரதேசம், பூட்டான் எல்லைகளில் குடைச்சல் கொடுத்து வரும் சீனா இப்போது வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்துள்ளது. மியான்மர் எல்லையில் தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் சீனா கொடுத்து வருகிறது.

வடகிழக்கு மாநிலங்கள்
இந்தியாவில் தாக்குதல் நடத்தும் வகையில் புதிய போர் முனையாக வடகிழக்கு மாநிலங்களை சீனா தேர்வு செய்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு தனிநாடு கோரும் தீவிரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன.

பயிற்சி கொடுத்த சீனா
இந்த குழுக்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதேபோல் மியான்மர் ஆயுத குழுக்களான United Wa State Army, Arakan Army ஆகியவற்றையும் மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவால் தேடப்படும் 4 பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்களுக்கு தெற்கு சீனாவின் குன்மிங் நகரில் ஆயுத பயிற்சி வழங்கப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாகா தீவிரவாதிகள்
நாகாலாந்து தனிநாடு கோரும் குழுக்களின் தலைவர்களும் சீனாவின் இந்த ஆயுத பயிற்சியில் பங்கேற்றனர். இவர்களில் 4 பேர் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்கள். கடந்த அக்டோபர் மாதம் சீனா இந்த பயிற்சியை கொடுத்திருக்கிறது. இந்த பயங்கரவாத தலைவர்கள், சீனா ராணுவத்தின் ஓய்வு பெற்ற, தற்போதைய அதிகாரிகளை சந்தித்து ஆயுத உதவிகளை பெற்றிருப்பதும் உறுதியாகி உள்ளது.

எல்லையில் தீவிர கண்காணிப்பு
கடந்த அக்டோபர் 21-ந் தேதி மியான்மர் எல்லையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இதனையடுத்து 1,000-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் மியான்மர் எல்லையில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வழக்கம் போல சீனா, வடகிழக்கு மாநில தீவிரவாதிகளுக்கு எந்த ஆயுத உதவியும் செய்யவில்லை என மறுத்தும் வருகிறது.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications