சீனாவில் நாளொன்றுக்கு 50,000 பேருக்கு வேலை..ஆனால் இந்தியாவில் 450 பேருக்குத்தான்..ராகுல்காந்தி நறுக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராய்ச்சூர்: சீனாவில் 24 மணி நேரத்துக்கு 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 450 பேருக்குத்தான் வழங்கப்படுகிறது என்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும் , ஆட்சியை பிடிக்க பாஜகவும் போராடுகின்றன.

China gives employment to 50,000 in 24 hours, but Modi to 450, says Rahul Gandhi

இந்த பட்ஜெட்டில் கர்நாடக மாநிலத்துக்கு சிறப்பான "கவனிப்பும்" மோடி அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில் 4 நாட்கள் பயணமாக கர்நாடக மாநிலத்துக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முதல் அவர் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இன்றைய தினம் ராய்ச்சூரில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

நாளொன்றுக்கு 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. ஆனால் இந்தியாவில் தயாரிப்போம், புத்துணர்ச்சி இந்தியா (ஸ்டார்ட் அப் இந்தியா), டிஜிட்டல் இந்தியா ஆகிய திட்டங்களை மோடி தொடங்கிய போதிலும் இந்தியாவில் நாளொன்றுக்கு 450 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

வேலையில்லா திண்டாட்டத்துக்கும், விவசாயிகளின் கஷ்டத்துக்கும் பிரதமர் மோடியிடம் பதில்கள் இல்லை. ஊழல் குறித்து பேசும்போது பிரதமர் மோடி தனது வலது பக்கமும், இடது பக்கமும் பார்த்து பேச வேண்டும்,

அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா 3 மாதங்களில் 80 கோடி சம்பாதித்து விட்டார். இதை நாட்டுக்கு நீிங்கள் தெரியப்படுத்த வேண்டும். பிரதமர் அலுவலகத்துக்கு நானே நேரில் சென்று விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். எனினும் பிரதமரோ ஒரு வார்த்தை கூட கூறாமல் அமைதி காத்தார் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rahul Gandhi today targeted Prime Minister Narendra Modi while addressing a gathering at Raichur that "When China is creating 50,000 jobs every 24 hours, our Prime Minister Narendra Modi, despite launching 'Make in India', Start up India' and 'Digital India', has only created 450 to 500 jobs in 24 hours,".

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற