For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரகாண்ட் உள்ளே.. குதிரைகளோடு நுழைந்த 100 சீன வீரர்கள்.. ஆக்கிரமிக்க முயற்சி? நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

லடாக்: உத்தரகாண்ட் மாநிலத்திற்குள் சீன படை வீரர்கள் புகுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. குதிரைகள் மூலம் சீன வீரர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திற்குள் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி புகுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Recommended Video

    மீண்டும் China ஆக்கிரமிப்பு முயற்சி? நடந்தது என்ன? | India China Border | Oneindia Tamil

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் கடந்த மே மாதத்தில் இருந்து கடும் மோதல் நிலவி வருகிறது. கடந்த வருடம் மே மாதத்தில் தொடங்கிய மோதல் லடாக்கில் உச்சம் தொட்டது. அதன்பின் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் லடாக்கில் அமைதி திரும்பியது. இதுவரை 13 கட்டமாக இரண்டு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

    ஆனாலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் லடாக் எல்லையில் மோதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. 17 மாதமாக விடாமல் இரண்டு நாடுகளும் லடாக் எல்லையில் படைகளை வாபஸ் வாங்காமல் குவித்து உள்ளன. பெரிய அளவில் இரண்டு நாட்களுக்கு இடையில் சண்டை வெளிப்படையாக நிலவவில்லை என்றாலும் கூட இன்னும் எல்லையில் பதற்றம் தணியவில்லை.

    பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்..லடாக் கோக்ராவிலிருந்து படைகளை விலக்கி கொண்ட இந்தியா-சீன ராணுவம்பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்..லடாக் கோக்ராவிலிருந்து படைகளை விலக்கி கொண்ட இந்தியா-சீன ராணுவம்

    பதற்றம்

    பதற்றம்

    லடாக் எல்லையில் கட்டுப்பாட்டு பகுதியில் மொத்தம் 8க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக சீனா ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கே பல இடங்களில் கண்டெயினர் கட்டுமானங்களை சீனாவின் பிஎல்ஏ ராணுவம் மேற்கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிதாக 8 இடங்களில் பிஎல்ஏ ராணுவம் இந்த கட்டுமானங்களை மேற்கொண்டதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய கட்டுமானங்கள், படை குவிப்பு காரணமாக எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

    வீரர்கள்

    வீரர்கள்

    எல்லை பகுதிகளில் இரண்டு நாடுகளும் அதிகபட்சம் 50 ஆயிரம் வீரர்கள் வரை குவித்து உள்ளனர். டேங்கர்கள், ஏவுகணைகள், கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளன. ஒரு பக்கம் 13 கட்டங்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்து இருந்தாலும் இன்னொரு பக்கம் மோதல் முடியாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் உத்தரகாண்ட் மாநிலத்திற்குள் சீன படைகள் புகுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. குதிரைகள் மூலம் சீன வீரர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திற்குள் புகுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    உத்தரகாண்ட்

    உத்தரகாண்ட்

    கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக ராணுவ தகவல்கள் கூறுகின்றன. மொத்தம் 100 சேனா வீரர்கள், குதிரைகளில் வந்து உள்ளனர். இவர்கள் உத்தரகாண்டில் இந்திய எல்லைக்கு உள்ளே 3 மணி நேரம் தங்கி இருந்துவிட்டு சென்றுள்ளனர். சீன படைகள் உள்ளே வந்ததை கேள்விப்பட்டு உடனடியாக இந்திய படைகள் அந்த பகுதிக்கு சென்று உள்ளது. ஆனால் இந்திய வீரர்கள் அங்கே வருவதற்கு முன்பே சீன படைகள் அங்கு இருந்து வெளியேறி இருக்கிறது.

    இந்திய படைகள்

    இந்திய படைகள்

    இதனால் இந்திய படைகளுக்கும், சீனா படைகளுக்கும் இடையில் மோதல் ஏற்படவில்லை. சரியாக இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ளது. இதனால் உத்தரகாண்ட் எல்லை பகுதியில் கொஞ்சம் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தங்களிடம் இது தொடர்பாக தகவல் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். இதனால் எல்லையில் தரப்பு இரண்டு நாட்டு படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டு உள்ளது.

     இரண்டு நாட்டு படை

    இரண்டு நாட்டு படை

    இரண்டு நாட்டு படைகள் தங்கள் வீரர்களை ரொட்டேஷன் முறையில் வைத்து பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. எல்லையில் தற்போது கடினமான வானிலை நிலவி வருகிறது. முக்கியமாக ஆக்சிஜன் குறைவாக உள்ளது, பல்வேறு மலைப்பகுதிகளில் இங்கே பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது கடினம். இதனால் இரண்டு நாட்டு படைகள் தங்கள் வீரர்களை ரொட்டேஷன் முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.

    English summary
    China PLA troop entered into Uttarkhand in horses and stayed for 3 hours says report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X