சீனாவிடம் உள்நோக்கம் உள்ளது.. இந்தியாவின் ரியாக்ஷன் சரியானதே.. அமெரிக்கா கருத்து
லடாக்: எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்தியா மிக சிறப்பாக எதிர்கொண்டது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவை செயலை அமெரிக்கா பாராட்டி உள்ளது.
Recommended Video
லடாக் எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது அமைதி திரும்ப தொடங்கி உள்ளது. அங்கு சீனா அடுத்தடுத்து தனது படைகளை வாபஸ் பெற்று வருகிறது. கல்வான் பகுதியில் இருந்து 2 கிமீ தூரத்திற்கு சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது.
அதை தொடர்ந்து இன்னொரு பக்கம் டெப்சாங் மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்தும் சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி வருகிறது. சீனாவுடனான இந்த பிரச்னையை மிக எளிதாக எல்லையில் இந்தியா எதிர்கொண்டு, அதை ஏறத்தாழ இந்தியா முடிவிற்கு கொண்டு வந்துள்ளது.

என்ன நிலைமை
இந்த நிலையில் எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்தியா மிக சிறப்பாக எதிர்கொண்டது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவை செயலை அமெரிக்கா பாராட்டி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் மாகாணங்களின் செயலாளர் மைக் பாம்பியோ கருத்து தெரிவித்துள்ளார். அதில், சீனாவிற்கு எதிராக இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்தியாவின் செயல் பாராட்டுக்குரியது.

சிறப்பானது
சீனாவின் மோசமான செயல் எல்லையில் அதிகரித்து வந்தது. பல இடங்களில் எப்படி சீனா அத்துமீறியதோ அதே முறையில் இந்திய எல்லையிலும் சீனா அத்துமீறியது. சீனா இப்படி அண்டை நாடுகளை சீண்டுவதை உலகம் ஏற்றுக்கொள்ளாது. இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்தியா சீனாவிற்கு எதிராக சிறப்பாக செயலாற்றி இருக்கிறது.

சரியாக எதிர்கொண்டது
சீனாவின் பிரச்னையை இந்தியா நன்றாக எதிர்கொண்டு சரி செய்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் உடன் பேசினேன். சீனா உண்மையில் எல்லையில் மோசமாக செயல்பட்டு இருக்கிறது. இந்தியர்கள் அதை நன்றாக எதிர்கொண்டு இருக்கிறார்கள். சீனா இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க இப்படித்தான் செய்கிறது. இதை குறைவாக எடை போட கூடாது.

தனித்த திட்டம்
சீனாவின் இந்த செயலை ஒரு தனித்த திட்டமாக பார்க்க கூடாது. உலக அளவில் சீனா செய்ய முயற்சிக்கும் திட்டமாக இதை பார்க்க வேண்டும். இதற்கு பின் பெரிய விஷயங்கள் இருக்கிறது. இமயமலை தொடங்கி வியட்நாம் வரை, ஜப்பான் வரை சீனா இப்படித்தான் அத்துமீறுகிறது. சீனா பெரிய திட்டத்தோடு செயல்படுகிறது, இந்தியா அதை சிறப்பாக கையாண்டு உள்ளது, என்று மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications