குவிக்கப்பட்ட 10 ஜாகுவார் போர் விமானங்கள்.. அந்தமானில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு.. என்ன நடக்கிறது?
அந்தமான்: அந்தமான் நிகோபார் பகுதியில் தற்போது இந்திய விமானப்படை சார்பாக 10 ஜாக்குவர் போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த இரண்டு நாட்களாக இந்திய பாதுகாப்பு படை அந்தமான் நிக்கோபார் பகுதியில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அங்கு இந்திய கடற்படை தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று முதல்நாள் அங்கு இந்தியா சார்பாக ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் போர் கப்பல்கள் 4க்கும் அதிகமாக ரோந்து பணிகளை மேற்கொண்டது. அதோடு இந்த போர் கப்பல்கள் சேர்ந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன
இந்த நிலையில் தற்போது அந்தமான் நிக்கோபார் பகுதியில் இந்திய விமானப்படை சார்பாக 10 ஜாக்குவர் போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது. SEPECAT எனப்படும் பிரான்சில் இருந்து வாங்கப்பட்ட போர் விமானங்களை இந்தியா அங்கே குவித்து வருகிறது. வான்வெளி சண்டைக்கு ஏற்ற இந்த விமானங்கள் அங்கே குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விமானங்கள் அங்கு தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏவுகணைகள் எப்படி
அதேபோல் இங்கே இந்தியா ஏவுகணைகளை இறக்கி உள்ளது. இந்தியாவின் ஹர்பூன் வகை ஏவுகணைகள் அங்கே களமிறக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் ஆகும். போர் கப்பல்களை தாக்குதவற்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது ஆகும் இது. இந்தியா அந்தமான் கடல் பகுதியில் தற்போது இதை களமிறக்கி உள்ளது.

அமெரிக்கா எப்படி
அந்தமான் எல்லையில் இந்தியாவுடன் அமெரிக்காவும் சேர்ந்து போர் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்று இன்றுதான் தகவல் வெளியானது. இதற்காக அமெரிக்காவின் போர் கப்பல்கள் ஏற்கனவே இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டது என்று கூறுகிறார்கள். அமெரிக்காவின் நிமிட்ஸ் போர் கப்பல் இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபடும் என்கிறார்கள். இது உலகிலேயே பெரிய அணு ஆயுத கப்பல் ஆகும்.

ஏன் இப்படி
அந்தமானில் திடீரென இரண்டு நாட்களாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை. ஆனால் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் அத்துமீறலை தடுக்கும் வகையில் இப்படி பாதுகாப்பு அதிகரிக்கப்படுத்துவதாக கூறுகிறார்கள். அங்கே சீனா எதுவும் செய்து விட கூடாது என்று முன்னெச்சரிக்கையாக இப்படி செயல்படுவதாக கூறுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications