அந்த ஒரு புள்ளி.. விட்டுத்தர மாட்டோம்.. லடாக்கில் இந்திய ராணுவத்தின் புது வியூகம்.. மாஸ்டர் ஸ்டிரோக்

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் இருக்கும் பாங்காங் திசா பகுதியில் இந்திய ராணுவம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அங்கு படைகளை தொடர்ந்து இந்திய ராணுவம் குவித்து வருகிறது.

கடந்த மே 5ம் தேதியில் இருந்து இந்தியா - சீனா இடையிலான அனைத்து எல்லையிலும் பதற்றம் நிலவி வருகிறது. முக்கியமாக சிக்கிம் எல்லை, லடாக் எல்லை, சீனா - இந்தியா - நேபாளம் எல்லை ஆகிய இடங்களில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் லடாக்கில் கல்வான் பகுதியில் சண்டை நடந்தது.

கடந்த 15-16 தேதிகளில் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு எதிராக சண்டை நடந்தது. அங்கு 3 நாட்கள் முன் நடந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

எந்த இடம் இது

எந்த இடம் இது

இந்த சண்டை நடந்த இடம் கல்வான் பகுதியில் இருக்கும் கட்டுப்பாட்டு எண் 14 ஆகும். ஆனால் கல்வான் பகுதியை விட சீனா அதிகம் கவனம் செலுத்துவது பாங்காங் திசா பகுதியைதான். பாங்காங் திசா பகுதியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று சீனா துடியாக துடிக்கிறது. இங்குதான் முதலில் மே 5ம் தேதி சண்டையே வந்தது. பாங்காங் திசோ பகுதி என்பது லடாக் பகுதிக்கு சீனாவில் இருந்து வரும் ஒரு நுழைவு வாயில் போன்றது. இரண்டு நாட்டு எல்லையில் இது மிக முக்கியமான இடம் ஆகும்.

இரண்டு நாடுகள்

இரண்டு நாடுகள்

தற்போது இந்த இடம் இரண்டு நாடுகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. ஆனால் இதை யார் முழுமையாக கட்டுப்படுத்த போகிறார்கள் என்பதுதான் கேள்வியே. அதாவது பாங்காங் திசோ பகுதியை மொத்தம் 8 பிங்கர்கள் எனப்படும் கட்டுப்பாட்டு பகுதிகளாக பிரித்து இருக்கிறார்கள். இதில் முதல் 4 பகுதியை இந்தியாவும், அடுத்த 4 பகுதியை சீனாவும் கட்டுப்படுத்தி வருகிறது.

அடிக்கடி சண்டை

அடிக்கடி சண்டை

இங்குதான் அடிக்கடிச் சண்டை வருகிறது. அதிலும் 4மற்றும் 5வது பிங்கர்களுக்கு இடையே சண்டை நடக்கிறது. கடைசி நான்கு பிங்கர்கள் எப்போதும் பதற்றமான நிலையில்தான் இருக்கிறது. இங்கு இருக்கும் பாங்காங் திசோ நதி சீனாவிற்கு கொஞ்சம் வலிமை அளிக்கிறது. இந்த பகுதியை மொத்தமாக கைப்பற்றினால், எதிர்காலத்தில் போர் வரும் போது எளிதாக வெற்றிபெறலாம்.

அதிகம் துடிக்கிறது

அதிகம் துடிக்கிறது

இதன் மூலம் லடாக்கில் எளிதாக கால் பதிக்கலாம். இதனால் இந்த இடத்தை சீனா குறி வைத்து வருகிறது. பாங்காங் திசோ பகுதியை கைப்பற்றும் நாடு மட்டுமே எதிர்காலத்தில் அங்கு ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால் பாங்காங் திசா பகுதியை விட்டுவிட்டு கல்வான் பகுதியில் சீனா தாக்குதல் நடத்தியது ஏதாவது திசை திருப்பும் காரணமாக இருக்கும் என்கிறார்கள். அதாவது பாங்காங் பகுதியில் இருந்து இந்தியாவின் கவனத்தை கல்வான் பக்கம் திருப்ப வேண்டும்.

சீனாவின் திட்டம்

சீனாவின் திட்டம்

அதன்பின் இந்தியாவின் படைகளை கல்வான் பகுதியில் குவிக்க வேண்டும். அந்த நேரம் பார்த்து பாங்காங் திசா பகுதியில் தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால்தான் கல்வான் பகுதியில் சீனா பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் சீனாவின் இந்த வலையில் இந்தியா சிக்கவில்லை. பாங்காங் திசோ பகுதியை இந்தியா கொஞ்சம் கூட விட்டுத்தரவில்லை.

8 கிமீ பகுதி

8 கிமீ பகுதி

மொத்தம் 8 கிமீ பகுதி முழுக்க பாங்காங் திசோவில் இந்தியா படைகளை குவித்து உள்ளது. சீனா ஏதாவது தந்திரம் செய்யலாம் என்பதால் இந்தியா அங்கு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. என்ன நடந்தாலும், கல்வானில் இன்னொரு சண்டை வந்தாலும் கூட, பாங்காங் திசோ பகுதியில் இருந்து படைகளை அகற்ற கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. பாங்காங் திசோவின் பிங்கர்கள் 4-5 இடையில்தான் மிக முக்கியமாக இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அந்த புள்ளிதான் அதிக பதற்றமான இடமாக உள்ளது.

சீனா என்ன செய்கிறது

சீனா என்ன செய்கிறது

இந்த இடத்தில் சீனா கவனம் செலுத்துகிறது என்பதற்கு சான்று, அங்கு சீனாவும் துருப்புகளை அமைத்து வருகிறது. மொத்தம் 62 புள்ளிகளில் சீனா தனது துருப்புகளை இங்கே குவித்து உள்ளது . அதேபோல் 300+ கேம்ப்களை சீனா இங்கே அமைத்து உள்ளது. இந்திய எல்லையில் இருந்து வெறும் 1 கிமீ தொலைவில் இந்த அத்துமீறலை சீனா செய்து வருகிறது.

Recommended Video

    UN Security Council-லில் 184 நாடுகளை ஒன்று திரட்டிய சென்னைக்காரர் T. S. Tirumurti
    மிக உறுதி

    மிக உறுதி

    கண்ணுக்கு கண் என்ற சூழ்நிலைதான் அங்கே நிலவி வருகிறது. கல்வான் மூலம் இந்தியாவின் கவனத்தை திசை திருப்பலாம் என்று சீனா நினைத்தது. ஆனால் இந்தியா சீனாவின் செயலுக்கு அசையவில்லை.கல்வான் பகுதியையும் விட்டுத்தர மாட்டோம், பாங்காங் திசோ பகுதியையும் விட்டுத்தர மாட்டோம் என்று இந்தியா மிக உறுதியாக உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+